பிரம்ம முகூர்த்தம்(பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருங்களேன்)
பிரம்ம முகூர்த்தம் *பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருங்களேன்..!* இதுபோன்று வேறு ஏதும் சுப நேரம் உண்டா? ஆம் இருக்கிறது. ஒருநாளில், இரண்டுமுறை இந்த முகூர்த்த நேரம் வரும். அது என்ன முகூர்த்தம்? அதன் பெயர் “கோதூளி லக்னம்.” காலையில் 24 நிமிடமும், மாலையில் 24 நிமிடமும் இந்த முகூர்த்தம் ஒவ்வொரு நாளும் வரும். சூரியன் உதித்த முதல் 24 நிமிடமும், சூரியன் அஸ்தமித்த பின் உள்ள 24 நிமிடமும் கோதூளி லக்ன நேரம் எனப்படும். அது என்ன கோதூளி லக்னம்? பிரம்ம முகூர்த்தம் கோ என்றால் பசு; தூளி என்றால் தூசு, பசுக்கள் காலையில் கூட்டமாக மேய்ச்சலுக்குப் போகும் போது...
ஸ்ரீ கந்தவேல் தரிசனம்
ஸ்ரீ கந்தவேல் தரிசனம் ௧ந்தர் அலங்காரம் சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார் கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல் அலங்கார நூற்று ளொருகவிதான் கற்றறிந்தவரே ! - அருணகிரிநாதர் பொருள் : ஸ்ரீ கந்தவேல் தரிசனம் சினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள் ; யமனுடைய போருக்கும் அஞ்சமாட்டார்கள் : இருண்ட நரகக் குழியை அடைய மாட்டார்கள் ; கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள் ; புலி , கரடி, யானை முதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மணம் கலங்க மாட்டார்கள் ; கந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய...
ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுவது ஏன்
🌼🌼🌼 சக்தி பீடங்கள் சக்தி தரிசனம் 4  🌼🌼🌼 🌼🌼🌼#பிரமராம்பிகை🌼🌼🌼 மூலவர் : மல்லிகார்ஜுனர், (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்) அம்மன்/தாயார் : பிரமராம்பாள், பருப்பநாயகி தல விருட்சம் : மருதமரம், திரிபலா தீர்த்தம் : பாலாநதி புராண பெயர் : திருப்பருப்பதம் ஊர் : ஸ்ரீசைலம் மாவட்டம் : கர்நூல் மாநிலம் : ஆந்திர பிரதேசம் பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் 🌼🌼🌼#தேவாரப்பதிகம்🌼🌼🌼 சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே. -திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டுத்தலங்களில் ஒன்று. 🌼🌼🌼தல வரலாறு:🌼🌼🌼 சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி...
உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது
*உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?* *மன்னர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக் கூடிய பொருள் எது.. என்பதே அவர் கேள்வி.* *“மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலு மண்டபத்தில் வைத்து விடுங்கள்..* *யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ, அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” தரப்படும் என அறிவிக்கப்பட்டது.* *மக்களும் யோசித்து, அவர்களுக்குத் தெரிந்து மகிழ்ச்சி தரும் பொருட்கள் எவையோ, அவற்றைக் கொண்டு வந்து அரண்மனை கொலு...
சொர்க்கத்துக்கு அனுமதிச் சீட்டு
சொர்க்கத்துக்கு அனுமதிச் சீட்டு! ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. ‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’ சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில்...
நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள்
நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள் நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள் பற்றிய பதிவு தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும். நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்களில் முக்கியமானவை பதினொன்று ஆகும். எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம். நான்காவது ஸ்தலம் திருவாவடுதுறை....
*ஆடி கிருத்திகை* *மாவிளக்கு வழிபாடு* மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று.பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல்,மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் இருந்து வந்ததுள்ளது.. ஆனால் தற்பொழுது மாக்கோலம் இடும் பழக்கம் குறைந்து கொண்டு வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன. அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள். நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர்.ஆறு,குளம் உள்ள...
சோழர்களின் குலதெய்வம்
சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி Nisumbasoodani of Tanjore சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி, தஞ்சை கீழவாசல் நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன், தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம். தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் அமைந்துள்ளது இக்கோயிலின் மூலவராக நிசும்பசூதனி அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூலவரை வட பத்ரகாளி என்றும், ராகுகால காளியம்மன் என்றும் அழைக்கின்றனர். திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளால் தஞ்சை நகரில் சோழர்களுடைய ஆட்சி ஆரம்பிக்கும் காலகட்டத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனிக்காக...
தீரன் சின்னமலை
தீரன் சின்னமலை  வீரத்தால் வெற்றி கொள்ளமுடியாத வீரன்: தீரன் சின்னமலை..! தீரன் சின்னமலை நினைவு தின சிறப்புப் பகிர்வு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, "தீரன் சின்னமலை மாளிகை" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணி மண்டபம் உள்ளது. சென்னையில் தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் அமைக்கப்பட்டது. 2005 ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி இந்திய அரசின் தபால் தந்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை, "தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை" வெளியிட்டது. இத்தகைய சிறப்புகளைப் பெற்றும், வரலாற்றின் சிறப்புப் பக்கங்களில்...