இந்திரஜித் மாண்டான்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸..பாகம்-137🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்29, .......................... இந்திரஜித் மாண்டான் .......................... விபீஷணன் பேசியதைக்கேட்ட இந்திரஜித் பெரும் கோபமுற்றான். கறுப்புக் குதிரைகள் பூட்டப் பட்டதும், மிகவும் சிறப்பான முறையில் அலங்கரிக்கப் பட்டதுமான தேரில் அமர்ந்து, எப்பேர்ப்பட்ட எதிரிகளாயினும் அவர்களை வீழ்த்துகிற வல்லமை படைத்த வில்லையும், அம்புகளையும் ஏந்தி, எமனைப்போலவே காட்சியளித்துக் கொண்டு எல்லோருக்கும் அழிவு காலம் நெருங்கி விட்டது என்பதை அறிவிப்பவன்போல, அங்கேநின்ற இந்திரஜித் ஹனுமானின் தோள் மீது அமர்ந்திருந்த லக்ஷ்மணனைப்பார்த்து, சில வார்த்தைகள் பேசினான். என்னுடைய சக்தியை இப்போது நீ பார்ப்பாய். வானத்திலிருந்து வீழ்கின்ற பெரும் மழையைப்போல், என் வில்லில்...
மண்டோதரியின் துயரம்!
🌸 🌸..பாகம்-144🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-36, .............................................................. மண்டோதரியின் துயரம்! ........................................................................ தன்னுடைய மூத்த சகோதரனாகிய ராவணன் கொல்லப் பட்டு யுத்த களத்தில் விழுந்து கிடந்த காட்சியைக் கண்டவுடன், விபீஷணன் அளவு கடந்த துக்கத்தால் பீடிக்கப் பட்டவனாக, கதறத் தொடங்கினான். பெரும் புகழ் படைத்த வீரனே! ராஜ நீதியை முற்றும் அறிந்தவனே! மிகவும் மேன்மையான படுக்கையின் மீது உறங்க வேண்டிய நீ, ஏன் இப்படி த் தரையில் வீழ்ந்து கிடக்கிறாய்? காமத்தினால் கவரப் பட்டவனாக, என்னுடைய வார்த்தையைக் கேட்காமல், இந்த கதியை அடைந்து விட்டாயே! நான் சொன்னது தான் நன்மை பயக்கும் என்பதை...
வால்மீகி ராமாயணம்
🌸🌸வால்மீகி இராமாயணம் - .. பாகம்-1 ... வால்மீகி ராமாயணம் .......................................................... முன்னுரை ................................. படிப்பவர்களின் அறிவை நாடுகிறது.- மஹாபாரதம், அவர்களுடைய இதயத்தைத் தொடுகிறது- ராமாயணம் அரசனின் கடமைகள், மனிதனின் நெறி முறைகள், பொதுவான தர்ம நியாயங்கள், விதியின் வலிமை, தர்மம் என்ற நெறியில் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள், யுத்த தர்மம்,.போன்ற பல விஷயங்களை மஹாபாரதம் போலவே , ராமாயணமும் எடுத்துக்கூறுகிறது. ஆனால், சூது, சதி, தந்திரம் போன்றவற்றுக்கு மஹாபாரதத்தில் இருக்கும் பங்கு- ராமாயணத்தில் இல்லை. மாறாக மஹாபாரதத்தில் இல்லாத அளவுக்கு, ராமாயணத்தில் தியாகம், பாசம், சுயநலமின்மை போன்ற பண்புகளைக் காட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. என்...
விபீஷணன் பட்டாபிஷேகம்
🌸 வால்மீகி  ராமாயணம் 🌸..பாகம்-145🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-37 ........................ விபீஷணன் பட்டாபிஷேகம் ................................................. என்னைத் தனியே விட்டு விட்டு, நீங்கள் எங்கே செல்லப் புறப் பட்டு விட்டீர்கள்! ஏன் என்னிடம்பேச மறுக்கிறீர்கள்? இந்த துர்பாக்கியவதியைக் கண்டு உங்கள் மனம் இரங்க வில்லையா? என்னைக் கண்டு உங்களுக்குக்கோபம் கூட வரவில்லையா? நகரத்தின் கதவுகளைத் தாண்டி, கால் நடையாக, துணையில்லாமல் இப்படி வெளியே வந்து நிற்கிறேனே? அதைக் கண்டு உங்களுடைய கோபம் பொங்கி எழவில்லையா? என் துக்கத்திற்கு ஆறுதல் சொல்லக் கூடாதா? என்றெல்லாம் கதறி அழுத மண்டோதரிமேலும் சொன்னாள், நல்ல குலத்தில் பிறந்து, பெரியவர்களுக்குரிய மரியாதையைக்...
அக்னிப் பிரவேசம்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸 🌸..பாகம்-148🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-40 ............................................ அக்னிப் பிரவேசம் .............................. ஒரு மிகச் சாதாரண மனிதன், ஒரு மிகச் சாதாரணப் பெண் மணியிடம் பேசுவது போல, அன்பு நீங்கிய, பேசத் தகாத வார்த்தைகளை நீங்கள் ஏன் என்னிடம் பேசுகிறீர்கள்?நீங்கள் நினைப்பது போன்றவள் அல்ல நான். என்னுடைய நன்னடத்தை பற்றி நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று தன் துன்பத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு, மெதுவான குரலில் பேசத் தொடங்கிய ஸீதை, ராமரைப் பார்த்து மேலும் சொன்னாள். ஒழுக்கமற்ற பெண்மணிகளின் நடத்தையை வைத்து, பெண்ணினத்தையே நீங்கள் எடை போடுகிறீர்கள் போலும்! ராவணனிடம் சிக்கியபோது...
பஞ்ச சம்ஸ்காரம்
ஸ்ரீமதே_ராமானுஜாய_நம யார்_சரணாகதி_செய்யலாம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொள்வதில் நிறைய பேருக்கு முதலில் வருகின்ற சந்தேகம். பிராமணர் அல்லாதார் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொள்ளலாமா? என்பது தான். பஞ்ச சம்ஸ்காரத்தின் மூலமாக நமது ஆத்மாவையே எம்பெருமானிடம் சரணமடைய வைக்கின்றோம். நமது உடலை அல்ல, ஹரி ஓம் ஷம்பே சிவ ஷம்பே மஹாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம் நமது ஆத்மா எம்பெருமானின் சொத்து . அதை நம் மனதில் எப்பொழுதும் நிலை நிறுத்திக் கொள்ளவே, அவனின் சின்னங்களான சங்கு சக்கர முத்திரைகளை நிரந்தரமாக தோளில் பொறித்துக் கொள்கின்றோம். ஜாதிகள் உடல் ரீதியானவை. ஆத்மாவுக்கு ஜாதிகள் இல்லை. எந்த ஜாதியினரும் உயர்ந்த பாகவதனாக...
ஸீதை வந்தாள்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸 சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர் 🌸..பாகம்-147🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-39 .............................................. சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்! ...................................... தன் அருகில் குனிந்த தலையுடன் நின்று கொண்டிருந்த ஸுதையை, உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு, ராமர், தன் மனதில் எழுந்த எண்ணங்களை வார்த்தைகளில் வடிக்கத் தொடங்கினார். சிறப்புடையவளே! ஸீதா! யுத்த களத்தில் எதிரியை வென்று என்னால் மீட்கப் பட்டு நீஇங்கே நிற்கிறாய். மனித முயற்சியினால் செய்யத் தக்கது என்னால் செய்து முடிக்கப் பட்டது. வேண்டுமென்றே எனக்கு இழைக்கப் பட்ட தீங்கு, அதனால் எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு, இவற்றை இழைத்த எதிரி- எல்லாமே என்னால் அழிக்கப் பட்டன. இன்று என்...
🌴🌴🌴விளாம்பழம் நன்மைகள் *விளாம்பழம்...* யார் யாருக்கெல்லாம் நரம்பு தளர்ச்சி பித்தம்,கால்சியம் குறைபாடு,குறிப்பாக மாதவிடாய் குறைபாடுகள் தலைமுடியில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறண்ட கூந்தல்,முகத்தில் ஏற்படும் வறட்சி உள்ளவர்கள் அனைவரும் எடுத்து கொள்ள வேண்டிய பழம் "விளாம்பழம்". பித்தம் சம்மந்தமான உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாட்டை நீக்க விளாம்பழம் மிகச்சிறந்த ஒன்று ஒரு பழத்தை ஒருவர் மட்டுமே சாப்பிடவேண்டும். ஏனென்றால் இவற்றில் உள்ள ஏதோ ஒரே ஒரு விதைக்கு மட்டுமே இந்த பண்பு உண்டு என்பதால் ஒரு பழத்தை ஒருவரே சாப்பிட வேண்டும் என்கிற சொல்லாடல் உண்டு. இதை அறிந்தவர்கள் தெளிவுபடுத்தினால்...
ஸீதை வந்தாள்
🌸 வால்மீகி ராமாயணம் - 🌸..பாகம்-146🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-38, ..................... ஸீதை வந்தாள்! ......................... நீங்கள் கூறிய இந்தப் பாராட்டு தான் மதிப்பிட முடியாதது. தேவர்களின் அரசாட்சியையும் விட, இது மேலானது” என்று ஸீதைக்கு நன்றி கூறிய ஹனுமான், தொடர்ந்து, ” நீங்கள் அனுமதித்தால், உங்களுக்குக் காவலாக இருந்து, உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த இந்த அரக்கிகளையெல்லாம், ஒரு நொடியில் நான் அழித்து விடுவேன். கணவன் மீது மாறாத அன்பு கொண்ட உங்களிடம் கொடிய உருவம் படைத்தவர்களான இவர்கள், பேசிய கொடூரமான வார்த்தைகள் என் நினைவில் நிற்கின்றன. அனுமதி கொடுங்கள், இவர்களை நான் கொல்கிறேன்”...
ராவணனின் துக்கம்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸- 🌸..பாகம்-132🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-24 ................................ ராவணனின் துக்கம் ............................................. வானரப் படையில் பலரைக் கொன்று அவர்களிடையே பெரும் நாசம் விளைவித்த பிறகு, ராமரால் வீழ்த்தப் பட்ட கும்ப கர்ணனின் உடல் கடலிலே போய் விழுந்து விட அவனுடைய தலை கோட்டை வாயிலில் வந்து விழுந்தது” என்று அரக்கர்கள் கூறக்கேட்ட ராவணன், பெரும் துன்பமுற்று மயங்கி விழுந்தான். அவனுடைய மகன்களாகிய தேவாந்தகன், நராந்தகன், த்ரிசிரன், அதிகாயன்ஆகியோரும் அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரர் களாகிய மஹோதரன், மஹாபார்ச்வன் ஆகியோரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். சிறிது நேரம் கழித்து மூர்ச்சை தெளிந்த ராவணன், கும்ப...