உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது

*உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?*

*மன்னர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக் கூடிய பொருள் எது.. என்பதே அவர் கேள்வி.*

*“மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலு மண்டபத்தில் வைத்து விடுங்கள்..*

*யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ, அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” தரப்படும் என அறிவிக்கப்பட்டது.*

*மக்களும் யோசித்து, அவர்களுக்குத் தெரிந்து மகிழ்ச்சி தரும் பொருட்கள் எவையோ, அவற்றைக் கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்து விட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காகக் காத்து இருந்தார்கள்.*

*மறுநாள், மன்னர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்தப் பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.*

உலகில்_மகிழ்ச்சி_தரக்கூடியது_எது

*முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டு இருந்தது…*

*ஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியைத் தரும்?” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர்.*

*அடுத்ததாக, இசைக் கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டு இருந்தது.*

*ஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியைத் தர முடியும்? இதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.*

*அடுத்து, அழகான மலர்கள் இருந்தன. “இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியைத் தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக் கொள்ள முடியாது” அதையும் நிராகரித்தார்.*

*அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. “நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியைத் தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர்.*

*அடுத்தாக ஒரு பெரிய சிற்பம் இருந்தது., அருகில் வந்தார். அதன் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.*

*அந்த சிற்பத்தின் கீழே.,*

*“அன்பே உலகை ஆளும்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார்..*

*மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார்.*

*“நீங்கள் தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.*

*“அரசே . சிற்பத்தின் கீழே ஒரு பெண்மணி அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள்.இந்த உலகில் அன்பை மட்டும் தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும்.*

உலகில்_மகிழ்ச்சி_தரக்கூடியது_எது

*அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும், அன்பைத் தான் எதிர்பார்க்கிறார்கள்.*

*அன்பு மட்டுமே உலகில் சிறந்தது.அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும்.*

*உலகில் சிறந்ததும், அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதும் அன்பு மட்டும் தான் என விளக்கினார் சிற்பி.*

*இதைக் கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார்.*

*“உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம் என்று கூறினார்.*

*ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்குத் தந்து, அரசபையில் வேலையையும் கொடுத்து ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர்.*

*உண்மையான அன்பை மற்றவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள்.*

*அதை விட அதிகமான அன்பை ஒரு நாள் அவர்களிடம் இருந்து நாம் பெறுவோம்….*

*அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்..?.*

*”அன்பு தான்” அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*

*வாழ்த்துக்கள்.*

*வாழ்க_வளமுடன்.*

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது

*எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம்* ஒருமுறையாவது , கோவில் சுவர்களில் *சிகப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் ?*
என்று யோசித்து பார்த்திருக்கிறோமா . ?

இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்…

*”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே!’’*
என்பது நம் முன்னோர் வாக்கு.!
ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது….✨
*வாருங்கள் கோவிலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துகொள்வோம்…!!!*

*கொடிமரம்* என்பது *இறைவனை* குறிக்கும்.

*கொடிக்கயிறு* *சக்தியைக்* குறிக்கும்.

உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் *(மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்)* குறிக்கும்.
நந்தி *தர்மத்தை* குறிக்கும்.

கர்பகிரகத்தில் இருக்கும் *இறைவன்* எப்போதும் *தர்மத்தையே* பாக்கிறான் என்பதே அர்த்தம்.

பெரிய நான்கு கோபுரவாசல் ஆலயங்கள் நான்கு வழிகளை காட்டுகின்றன.
அவை

*பக்திவழி,*
*ஞானவழி,*
*ராஜவழி,*
*கர்மவழிகளை* குறிக்கும்.

எந்த வழிகளாலும் *நீ இறைவனை காணலாம்* என்பதே அதன் அர்த்தம்.

இங்கே நான்கு வாசல் வைக்கப்பட்ட ஆலயமானாலும் கர்பகிரத்துக்கு ஒருவாசல் தான் வைத்தார்கள் ஏன் என்றால் *தாயின் கருவறையும் ஆலய கர்பகிரகமும்* ஒன்றுதான்.

அதனாலேயே *கர்பகிரகத்தை இருளாகவும்* அதன் விதானத்தையும் அரைகோளவடிவமாக வைத்தார்கள்.

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது

வெளியில் உள்ள ஒளிகதிர்களை கோபுரம் வாங்கி கர்பகிரத்து அனுப்புகிறது.

கர்பகிரகம் இருளாக இருப்பதால் அந்த ஒளிக்கதிர்கள் தங்கமுடியாமல் வெளியேறிகொண்டு இருக்கும்.

*கருவறையில் ஒளிக்கும்…*
வேத மங்கள மந்திர அலைகள் இதனாலே வெளியே பரவுவதால் அவை உடலில் படவேணும் என்பதற்காகவே திருக்கோவில் ஆண்கள் சட்டை அணிவது இல்லை…

கர்பகிரகத்துள் இறைவன் ஏன் வந்தான் என பார்போம். *ஆண் பெண் கலவையிலேயே கர்பம் தரிக்க முடியும்.*

அந்த கலவையின் நிறமாகதான்
*ஆணின் வெள்ளையணுவை* (வெள்ளை) நிறமாகவும்
*பெண்ணின் கருப்பை நிறத்தை காவி* (சிவப்பு) நிறமாகவும்
*ஆலய வெளிச்சுவரில் வெள்ளையும் காவியுமாக வர்ணம் தீட்டிணார்கள்…*

இந்த *கலவையில்தான் இறைவனின் ஆன்மா* தாயின் கர்பகிரகத்துள் பிண்டவடிவில் தோண்றுகிறான்.

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது

இந்த பிண்ட வடிவம்தான் லிங்கத்தின் உறுளை வடிவமாக வைத்தனர். *மிருகங்கள் கூட பிண்டவடிவிலேயே தோண்றுகின்றன.*

அதனால் இவை எல்லா உயிகளின் தோற்றம் இறைவன் இயக்கம் என்பதை உணர்த்துவதே.
இறைவனை வேதமந்திர மூலமாக..

ஆகாயத்தில் இருந்து காற்றுக்கு அணுப்பி காற்றில் மூலமாக யாகத்துக்குள் அணுப்பி வைத்து யாக அக்னியில் இருந்து நிறைகும்பத்துக்கு மாற்றி அந்த நீரை விக்ரகத்துள் அனுப்பி பஞ்சபூதத்தை அந்த *விக்ரகத்துள் அடக்கியே நாம் இறைவனை வழிபடுகிறோம்.*

அதனாலேயே *பிராணபிதிஷ்டை என அழைக்கிறோம்…!!!*
என்ன ஒரு தெய்வீக அறிவியல் கலந்த ஆன்மிக தகவல் வியப்பூட்டுகிறது அல்லவா…
*இந்து தர்மத்தை நினைத்து நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்…!!!*

இனி கோயில்களில் சுவர்களில்❗❕ *சிவப்பு வெள்ளை நிறங்களை பற்றி நாமே இனி தெரிந்து கொள்வோம்….*

*கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் தெரியுமா?*
அறிவியல் பூர்வமான விளக்கம்…

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், *கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது.* அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள *ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.*

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது

இது *நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும்.* அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும்.

எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்….

அது *உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்…!!!*

*நமது முன்னோர்கள் இந்து தர்மத்தையும், அதன் கலாச்சாரத்தையும், மிகவும் சிறப்பாக வழிநடத்தி உள்ளார்கள்…*

*இன்றைய இளைய தலைமுறைகள் அவற்றை பின்பற்றி காப்பதே இளைய தலைமுறைகள் கடைமையாகும்…!!!*

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here