🌸 வால்மீகி ராமாயணம் 🌸
🌸..பாகம்-148🌸
…..
யுத்த காண்டம்.
........................
அத்தியாயம்-40
............................................
அக்னிப் பிரவேசம்
..............................
ஒரு மிகச் சாதாரண மனிதன், ஒரு மிகச் சாதாரணப் பெண் மணியிடம் பேசுவது போல, அன்பு நீங்கிய, பேசத் தகாத வார்த்தைகளை நீங்கள் ஏன் என்னிடம் பேசுகிறீர்கள்?நீங்கள் நினைப்பது போன்றவள் அல்ல நான்.
என்னுடைய நன்னடத்தை பற்றி நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று தன் துன்பத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு, மெதுவான குரலில் பேசத் தொடங்கிய ஸீதை, ராமரைப் பார்த்து மேலும் சொன்னாள்.
ஒழுக்கமற்ற பெண்மணிகளின் நடத்தையை வைத்து, பெண்ணினத்தையே நீங்கள் எடை போடுகிறீர்கள் போலும்! ராவணனிடம் சிக்கியபோது...
ஸ்ரீமதே_ராமானுஜாய_நம
யார்_சரணாகதி_செய்யலாம்
பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொள்வதில் நிறைய பேருக்கு முதலில் வருகின்ற சந்தேகம்.
பிராமணர் அல்லாதார் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொள்ளலாமா? என்பது தான்.
பஞ்ச சம்ஸ்காரத்தின் மூலமாக நமது ஆத்மாவையே எம்பெருமானிடம் சரணமடைய வைக்கின்றோம்.
நமது உடலை அல்ல,
ஹரி ஓம் ஷம்பே சிவ ஷம்பே மஹாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்
நமது ஆத்மா எம்பெருமானின் சொத்து .
அதை நம் மனதில் எப்பொழுதும் நிலை நிறுத்திக் கொள்ளவே,
அவனின் சின்னங்களான சங்கு சக்கர முத்திரைகளை நிரந்தரமாக தோளில் பொறித்துக் கொள்கின்றோம்.
ஜாதிகள் உடல் ரீதியானவை.
ஆத்மாவுக்கு ஜாதிகள் இல்லை.
எந்த ஜாதியினரும் உயர்ந்த பாகவதனாக...
Spiritual journey
வால்மீகி ராமாயணம்.பாகம்147 சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்
sm.maheshdec94 -
🌸 வால்மீகி ராமாயணம் 🌸
சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்
🌸..பாகம்-147🌸
…..
யுத்த காண்டம்.
........................
அத்தியாயம்-39
..............................................
சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்!
......................................
தன் அருகில் குனிந்த தலையுடன் நின்று கொண்டிருந்த ஸுதையை, உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு, ராமர், தன் மனதில் எழுந்த எண்ணங்களை வார்த்தைகளில் வடிக்கத் தொடங்கினார்.
சிறப்புடையவளே! ஸீதா! யுத்த களத்தில் எதிரியை வென்று என்னால் மீட்கப் பட்டு நீஇங்கே நிற்கிறாய்.
மனித முயற்சியினால் செய்யத் தக்கது என்னால் செய்து முடிக்கப் பட்டது.
வேண்டுமென்றே எனக்கு இழைக்கப் பட்ட தீங்கு, அதனால் எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு, இவற்றை இழைத்த எதிரி- எல்லாமே என்னால் அழிக்கப் பட்டன.
இன்று என்...
🌸 வால்மீகி ராமாயணம் -
🌸..பாகம்-146🌸
…..
யுத்த காண்டம்.
........................
அத்தியாயம்-38,
.....................
ஸீதை வந்தாள்!
.........................
நீங்கள் கூறிய இந்தப் பாராட்டு தான் மதிப்பிட முடியாதது. தேவர்களின் அரசாட்சியையும் விட, இது மேலானது” என்று ஸீதைக்கு நன்றி கூறிய ஹனுமான், தொடர்ந்து, ” நீங்கள் அனுமதித்தால், உங்களுக்குக் காவலாக இருந்து, உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த இந்த அரக்கிகளையெல்லாம், ஒரு நொடியில் நான் அழித்து விடுவேன்.
கணவன் மீது மாறாத அன்பு கொண்ட உங்களிடம் கொடிய உருவம் படைத்தவர்களான இவர்கள், பேசிய கொடூரமான வார்த்தைகள் என் நினைவில் நிற்கின்றன. அனுமதி கொடுங்கள், இவர்களை நான் கொல்கிறேன்”...
🌸 வால்மீகி ராமாயணம் 🌸-
🌸..பாகம்-132🌸
…..
யுத்த காண்டம்.
........................
அத்தியாயம்-24
................................
ராவணனின் துக்கம்
.............................................
வானரப் படையில் பலரைக் கொன்று அவர்களிடையே பெரும் நாசம் விளைவித்த பிறகு, ராமரால் வீழ்த்தப் பட்ட கும்ப கர்ணனின் உடல் கடலிலே போய் விழுந்து விட அவனுடைய தலை கோட்டை வாயிலில் வந்து விழுந்தது” என்று அரக்கர்கள் கூறக்கேட்ட ராவணன், பெரும் துன்பமுற்று மயங்கி விழுந்தான்.
அவனுடைய மகன்களாகிய தேவாந்தகன், நராந்தகன், த்ரிசிரன், அதிகாயன்ஆகியோரும் அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரர் களாகிய மஹோதரன், மஹாபார்ச்வன் ஆகியோரும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து மூர்ச்சை தெளிந்த ராவணன், கும்ப...
🌸 வால்மீகி ராமாயணம் 🌸
🌸..பாகம்-131🌸
…..
யுத்த காண்டம்.
........................
அத்தியாயம்-23
...............
மடிந்தான் கும்பகர்ணன்
....................
அங்கதன் விடுத்த அறைக் கூவலால், தங்களுடைய தைரியத்தைத் திரும்பப் பெற்றவர்களாக வானரர் படைத் தலைவர்களும், அவர்களைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் போர்க் களத்திற்குத் திரும்பினர். கும்பகர்ணன் மீது அவர்கள் பாறைகளையும், குன்றுகளையும் பெரும் மரங்களையும் வீசி எறிந்தனர்.
ஆனால், இவையெல்லாம் அவன் மீது விழுந்து நொறுங்கிப் பொடிப் பொடியாகி விட்டன. வானரர்களின் தாக்குதலால் கோபமுற்ற அவன், அவர்களை அழிக்கத் தொடங்கினான். மீண்டும் பயத்தினால் பீடிக்கப் பட்டு, வானரர்கள் நான்கு திசைகளிலும் ஓடினர். சிலர் கடலில் விழுந்து மூழ்கி...
🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ
🌸..பாகம்-130🌸
…..
யுத்த காண்டம்.
........................
.அத்தியாயம்-22
.............................
வானரப் படை சிதறியது!
..........................................
மேன்மை பொருந்திய குலத்தில் பிறந்திருந்தாலும் உனக்கு அகங்காரமும் மடமையும் அதிகமாக இருக்கிறது. கூர்மையான அறிவில்லாததால் எந்தநேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ள உன்னால் முடியவில்லை” என்று கும்ப கர்ணனைப்பார்த்துப் பேசத் தொடங்கிய மஹோதரன் மேலும் சொன்னான், எது செய்யத் தகுந்தது? எது செய்யத் தகாதது என்பதை அறியாதவரல்ல நமது மன்னர்.
அவருக்குக் காலம், இடம், ஆகியவற்றின் தன்மையும் , தனக்கு எது சரியான தருணம் என்பதும் நன்கு தெரியும். மேலும், தன்னுடைய...
💥💢🔶💢💥
🟨🟥🟨🟥🟨🟥🟨🟥
🔥🔥🔥🔥🔥🔥🔥
🟨🟥🟨🟥🟨🟥🟥🟥
*உமா மஹேஸ்வரர் கோவில், திருநல்லம் (கோனேரி ராஜபுரம்)*
கும்பகோணம் - காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டுரோடில் இறங்கி 1 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்
*இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும்*
*இத்தலத்தை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்பது அப்பர் மெருமானின் அருள் வாக்கு.*
*இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*
*இத்தல இறைவன் நாலரை அடி உயர...
#பிரதோஷம்
#சிவபுராணமும்
#சிவபுராணத்தின்_பெருமைகளும்
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.
3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு...
*_பக்த விஜயம்_*
பக்த விஜயம்
கோராகும்பார்
கோர கும்பர் மண்பாண்டம் செய்யும் குயவர் குடியில் பிறந்தவர். தீவிர பாண்டுரங்க பக்தர், இறைவனுக்கு எப்போதும் உண்மையாக இருக்கவேண்டும் என்பது அவரது குணம். இறைவனே ஸத்யஸ்வரூபன் தானே.
இவர் மஹாராஷ்ட்ராவில் ஸத்யபுரி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருக்குப் பின் அவ்வூருக்கு கோராபா தேர் என்று பெயர் வந்துவிட்டது. பாண்டுரங்கன் மீது திட நம்பிக்கை கொண்ட இவர் ஒரு குயவர்.
மண்பாண்டங்கள் செய்து கடைவீதியில் விற்று ஓடிக்கொண்டிருந்தது ஜீவனம். சுவாசமோ விட்டலனின் நாமம்.
ஒருநாள் பானை செய்வதற்காக களிமண்ணைக் கால்களால் துவைத்துக் கொண்டிருந்தார். கால்களுக்குத்தானே வேலை?...