🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ
🌸..பாகம்-138🌸
…..
யுத்த காண்டம்.
........................
அத்தியாயம்-30
......................................
ராவணனின் துக்கம்
.................................................
பலவாறாக லக்ஷ்மணனைக் கொண்டாடிய பிறகு ராமர், வானரர் படைத் தலைவர்களில்ஒருவனாகிய ஸுக்ஷணனை அழைத்து, உடம்பைத் துளைத்த அம்புகளினால் ஏற்பட்ட வலி முழுமையாக நீங்கி, லக்ஷ்மணன் விரைவில் உடல் நலம் பெறும் வகையில் அவனுக்கு மருத்துவம் செய்வாயாக! லக்ஷ்மணன் மட்டுமின்றி, விபீஷணன் மற்றும் காயமுற்ற வானர வீரர்கள் அனைவருக்குமே உன் மருத்துவம் தேவைப் படுகிறது” என்று கூறினார்.
ஸுக்ஷணன் ஒரு மூலிகையின் மணத்தை மூக்கின் வழியாக லக்ஷ்மணன் இழுக்குமாறு செய்தான். சிறிது நேரத்தில் லக்ஷ்மணனுக்கு உடல் வலி...