Home Spiritual journey

Spiritual journey

தேய்பிறை அஷ்டமி
தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாளா தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளை பைரவ வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் கடன் இல்லாத நிம்மதியை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய அதிர்ஷ்டமான நாளாக நாளை வர இருக்கும் தேய்பிறை அஷ்டமியில் என்ன செய்தால் நமக்கு கடன் பிரச்சினைகள் தீரும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். பைரவர் உடைய திருப்பாதாங்களில் வைக்கும் எலுமிச்சை பழத்திற்கு அதீத சக்திகள் இருப்பதாக ஐதீகம்...
இந்திரஜித்தின் மாயாஜாலம்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ 🌸..பாகம்-134 யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-26 ..... இந்திரஜித்தின் மாயாஜாலம் ..................... வானரப் படையில் எல்லோரும் முழுமையான மனச்சோர்வை அடைந்து விட்ட நிலையில், ஹனுமான் முதலானோரைப் பார்த்து விபீஷணன்,” அச்சப் படவேண்டிய அவசியமில்லை. மனச்சோர்வு அடையுமாறு எதுவும் நிகழ்ந்து விடவில்லை” என்று தொடங்கி மேலும் சொன்னான். இந்திரஜித் ஏவியது ப்ரம்ம தேவனால் நிர்வகிக்கப் படுகிற அஸ்திரம் என்பதால், அதற்குக் கட்டுப் பட வேண்டிய அவசியம் ராம- லக்ஷ்மணர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது- அவ்வளவு தான். அப்போது ஹனுமான்,” அப்படியென்றால் இவர்களையும் இந்தப் படையில் இன்னமும் உயிருடன் இருக்கும் வானர வீரர்களையும், அந்த அஸ்திரத்தின்...
இந்திரஜித்தின் மாயாஜாலம்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸 🌸..பாகம்-133 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-25 ............................................ ராம- லக்ஷ்மணர்கள் மயங்கி வீழ்ந்தனர் ................................................ ராவணனின் மகன்களும், சகோதரர்களும் யுத்தத்திற்குப் புறப்பட்ட போது, யானை மீது அமர்ந்து அஸ்தமனமாகும் சூரியனைப்போல், மஹோதரன் காட்சியளித்தான். தேரின் மீது ஏறி அமர்ந்த த்ரிசிரன், பெரும் மழையைத் தாங்கி வரும் கரும்மேகம்போல்தோற்றமளித்தான். சிறந்த குதிரைகளால் இழுக்கப் பட்ட தேரில் அமர்ந்த அதிகாயன், மேரு மலை போல் தோன்றினான். மயில் வாகனத்தின் மீது கையில் வேல் தாங்கி ஏறி, அமர்ந்த முருகன்போல , நராந்தகன் காணப் பட்டான்.தேவாந்தகனோ, விஷ்ணு போலவே காட்சியளித்தான். மஹாபார்ச்வன், குபேரன் போல...
வால்மீகி ராமாயணம்
🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ 🌸..பாகம்-138🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-30 ...................................... ராவணனின் துக்கம் ................................................. பலவாறாக லக்ஷ்மணனைக் கொண்டாடிய பிறகு ராமர், வானரர் படைத் தலைவர்களில்ஒருவனாகிய ஸுக்ஷணனை அழைத்து, உடம்பைத் துளைத்த அம்புகளினால் ஏற்பட்ட வலி முழுமையாக நீங்கி, லக்ஷ்மணன் விரைவில் உடல் நலம் பெறும் வகையில் அவனுக்கு மருத்துவம் செய்வாயாக! லக்ஷ்மணன் மட்டுமின்றி, விபீஷணன் மற்றும் காயமுற்ற வானர வீரர்கள் அனைவருக்குமே உன் மருத்துவம் தேவைப் படுகிறது” என்று கூறினார். ஸுக்ஷணன் ஒரு மூலிகையின் மணத்தை மூக்கின் வழியாக லக்ஷ்மணன் இழுக்குமாறு செய்தான். சிறிது நேரத்தில் லக்ஷ்மணனுக்கு உடல் வலி...
ஆதிவம்சாவதரணப் பர்வம்-3
மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-3 .. ஆதிவம்சாவதரணப் பர்வம்.. பெரும் புகழ் கொண்ட முனிவர் ஒருவர் ஆணிமாண்டவ்யர் என்ற பெயரில் இருந்தார். அவர் வேதங்களின் விளக்கங்களில் ஆழ்ந்த புலமை கொண்டு, சிறப்புற்றுப் பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, பெரும் நற்பெயர் பெற்றிருந்தார். அப்பாவியாக இருந்தும், திருட்டுப் பழி சுமத்தப்பட்டு, அந்த வயதான முனிவர் {ஆணிமாண்டவ்யர்}, கழுவிலேற்றபட்டார். அதனால் ஆணிமாண்டவ்யர் தர்மதேவனை வரவழைத்து, "எனது குழந்தைப் பருவத்தில் பறக்கும் ஒரு சிறு பூச்சியைக் கூரான புல் கொண்டு நான் துளைத்திருக்கிறேன். ஓ தர்மா! அந்த ஒரு பாவத்தை நான் நினைவு வைத்திருக்கிறேன். அதைத்தவிர வேறு எந்தப் பாவமும் எனது...
ஆதிவம்சாவதரணப் பர்வம்
மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-1 ஆதிவம்சாவதரணப் பர்வம் "ஜனமேஜயன் நாக வேள்வியில் அமர்ந்திருக்கிறான், என்று கேள்விப்பட்ட கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அங்கே சென்றார். அந்தப் பாண்டவர்களின் பாட்டன் , கன்னிகையான சத்தியவதிக்கும், சக்தியின் மைந்தன் பராசரருக்கும், யமுனையின் தீவு ஒன்றில் பிறந்தவராவார். அந்தச் சிறப்பு வாய்ந்தவர் {வியாசர்}, பிறந்தவுடன் தனது விருப்பத்தினால் மட்டுமே விருப்பிய உடனே தன் சுய சங்கல்பத்தாலேயே தன் உடலை வளர்த்து, வேதங்களையும் அதன் கிளைகளையும், வரலாறுகள் அனைத்தையும் கற்றார். இங்குச் சக்திரி என்று சொல்லப்படுபவர், வசிஷ்டரின் புதல்வராவார். தவங்களாலும், முயற்சியுடன் கூடிய கல்வியாலும், அத்யாயனத்தினாலும், விரதங்களாலும், உண்ணாநோன்புகளாலும், குலத்தினாலும், யாகத்தினாலும் மற்றவர்...
ஆதிவம்சாவதரணப் பர்வம்-3
மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-2 ஆதிவம்சாவதரணப் பர்வம் வைசம்பாயனர் சொன்னார், "உபரிசரன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தவனாக இருந்தான். வேட்டைக்கும் அவன் அடிமையாக இருந்தான். வசு என்றும் அழைக்கப்பட்ட அந்தப் பௌரவகுல மன்னன் உபரிசரன், இந்திரனின் ஆலோசனையின்படி அருமையானதும், இன்பத்தை அளிப்பதுமான சேதி நாட்டை அடக்கி ஆண்டான். சில காலங்களுக்குப் பிறகு, ஆயுதங்களை விடுத்து, தனிமையான இடத்தில் இருந்து, கடுந்தவம் செய்தான். அந்தக் காலத்தில், உபரிசரன் தேவர்களின் தலைமைப் பதவியை வேண்டிக் கடுந்தவம் இருக்கிறான் என்று எண்ணிய தேவர்கள், இந்திரனின் தலைமையில் வந்து அந்த ஏகாதிபதியை அணுகினர். தேவர்கள்,...
மண்டோதரியின் துயரம்!
🌸 🌸..பாகம்-144🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-36, .............................................................. மண்டோதரியின் துயரம்! ........................................................................ தன்னுடைய மூத்த சகோதரனாகிய ராவணன் கொல்லப் பட்டு யுத்த களத்தில் விழுந்து கிடந்த காட்சியைக் கண்டவுடன், விபீஷணன் அளவு கடந்த துக்கத்தால் பீடிக்கப் பட்டவனாக, கதறத் தொடங்கினான். பெரும் புகழ் படைத்த வீரனே! ராஜ நீதியை முற்றும் அறிந்தவனே! மிகவும் மேன்மையான படுக்கையின் மீது உறங்க வேண்டிய நீ, ஏன் இப்படி த் தரையில் வீழ்ந்து கிடக்கிறாய்? காமத்தினால் கவரப் பட்டவனாக, என்னுடைய வார்த்தையைக் கேட்காமல், இந்த கதியை அடைந்து விட்டாயே! நான் சொன்னது தான் நன்மை பயக்கும் என்பதை...
வால்மீகி ராமாயணம்
🌸🌸வால்மீகி இராமாயணம் - .. பாகம்-1 ... வால்மீகி ராமாயணம் .......................................................... முன்னுரை ................................. படிப்பவர்களின் அறிவை நாடுகிறது.- மஹாபாரதம், அவர்களுடைய இதயத்தைத் தொடுகிறது- ராமாயணம் அரசனின் கடமைகள், மனிதனின் நெறி முறைகள், பொதுவான தர்ம நியாயங்கள், விதியின் வலிமை, தர்மம் என்ற நெறியில் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள், யுத்த தர்மம்,.போன்ற பல விஷயங்களை மஹாபாரதம் போலவே , ராமாயணமும் எடுத்துக்கூறுகிறது. ஆனால், சூது, சதி, தந்திரம் போன்றவற்றுக்கு மஹாபாரதத்தில் இருக்கும் பங்கு- ராமாயணத்தில் இல்லை. மாறாக மஹாபாரதத்தில் இல்லாத அளவுக்கு, ராமாயணத்தில் தியாகம், பாசம், சுயநலமின்மை போன்ற பண்புகளைக் காட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. என்...
விபீஷணன் பட்டாபிஷேகம்
🌸 வால்மீகி  ராமாயணம் 🌸..பாகம்-145🌸 ….. யுத்த காண்டம். ........................ அத்தியாயம்-37 ........................ விபீஷணன் பட்டாபிஷேகம் ................................................. என்னைத் தனியே விட்டு விட்டு, நீங்கள் எங்கே செல்லப் புறப் பட்டு விட்டீர்கள்! ஏன் என்னிடம்பேச மறுக்கிறீர்கள்? இந்த துர்பாக்கியவதியைக் கண்டு உங்கள் மனம் இரங்க வில்லையா? என்னைக் கண்டு உங்களுக்குக்கோபம் கூட வரவில்லையா? நகரத்தின் கதவுகளைத் தாண்டி, கால் நடையாக, துணையில்லாமல் இப்படி வெளியே வந்து நிற்கிறேனே? அதைக் கண்டு உங்களுடைய கோபம் பொங்கி எழவில்லையா? என் துக்கத்திற்கு ஆறுதல் சொல்லக் கூடாதா? என்றெல்லாம் கதறி அழுத மண்டோதரிமேலும் சொன்னாள், நல்ல குலத்தில் பிறந்து, பெரியவர்களுக்குரிய மரியாதையைக்...

Don't miss

Most popular

Recent posts

Timer Code.txt Displaying Timer Code.txt.