ஸ்ரீ சிவ கீதை

ஸ்ரீ சிவ கீதை

– பகுதி 40

விரைவில் முடிய யுள்ளது அதனை தொடர்ந்து விஷ்ணு புராணம் பகுதி ஆரம்பம்

ஆதி அந்தத்தை
ஆரத்தழுவும்
அதிகாலை தென்றல்

அதியுக தரிசனம்
ஆதவ தரிசனமே
,,
விழிப்பொன்று யெல்லாம் விழிப்பல்ல
ஆதவ முன்விழிப்பே ஆத்ம விழிப்பு

ஸ்ரீ சிவ கீதை

நம ஓம் நமசிவாய
விசையினோடெழு பசையு
நஞ்சினை யசைவுசெய்தவன்
மிழலைமாநகர்
இசையுமீசனை நசையின்மேவினான்
மிசைசெயா வினையே

வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது.
சந்தோஷம் !! துக்கம் !! என்ன வித்தியாசம் ..

ஸ்ரீ சிவ கீதை

சந்தோஷத்தில் எதையுமே மேலோட்டமாக அணுகுவோம் !!

துக்கத்தில் எதையுமே ஆழ்ந்து அணுகுவோம் !!

ஆனால் ஆனந்தத்தில் எதையுமே அதுவாக அனுப்பிவிப்போம் ..

ஆனந்தமே நம் இயல்பு நிலை , இருப்பு நிலை …

சந்தோஷமும் துக்கமும் வரும் போகும் !!

ஆனந்தத்தின் இருந்தே இந்த வரும்  நிகழ்கின்றது ..

ஆனந்தத்தை தான் எப்பொதும் அனுபவித்துகொண்டேபோகும் இருக்கின்றோம் !!!

அதுதான் ஆனந்தம் என்று உணராது ??

ஸ்ரீ சிவ கீதை

ஸ்ரீ சிவ கீதை

ஆனந்தக்கூத்தன் திருவடி போற்றி.

என்னை அறிய என்ன செய்யவேண்டும் ? ஓர் தம்பி கேள்வி !!

உன்னை உனதாக்கி உனக்கே அருளி !!
இன்றுவரையில் உன்னை உன்னையாகவே காட்டிக்கொண்டே இருக்க !!
உனக்குள்ளே நடைபெறுவதையும் !!
உனக்காகவே வடிவமைக்கப்பட்டு !!
உன்னை அதில் இருத்தி !!
உன்னில் இருந்து என்ன வெளிப்பட வேண்டும் என்றும் தீர்மானித்து !!
வெளிப்பட தேவையாக காலம், சூழல், சுற்றம் என்று அனைத்தையும் கொடுத்து !!
உன்னை நீ என்று நினைக்கும்படி வைத்துக்கொண்டு இருக்கிறதே ஓர் பேராற்றல் அதை உணரவேண்டும் !!

நான் நானாகவே இருக்க என்ன செய்கிறேன் என்று சிந்தித்தால்,

உனக்கே உதவாதவன் நீ என்ற மெய் புலப்படும் !!

அப்போது என்னை என்னைபோலவே ??
அதுவும் என் எண்ணம்போலவே ??
யாரோ நிகழ்த்துவதாலே நானே இருக்கிறேன் !! என்ற தெளிவும் பிறக்க ??

ஸ்ரீ சிவ கீதை

ஸ்ரீ சிவ கீதை

என்னையும் கொண்டு ஏதோ ஒன்று, என்னை என்னையாக காட்டி, எதையெல்லாம் அனுபவிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது,

அப்போது நான் என்று நினைக்ககூட ?? நான் இல்லாத ஒன்றே என்னோடு சேர்த்து எதையும் அதுவாக காட்டிக்கொண்டு இருக்கிறது !!

நான் என்று பிரித்து பார்க்க எதுமில்ல இறையின் துகளே நானாக தெரிகிறது !!

நான் நானா ???

அறிவிப்பவனை அனுபவி அதுவே நீ நீயாக இருப்பதன் பலன் !!

உளறல் என்றால் ?? உளறல் !!
தெளிவு என்றால் ?? தெளிவு !!

எதுவும் காட்டபடுபவனாலே நிகழ்கிறது என்று அவனே சிவமென்று இருத்தியாளும் திருவருளால் !!

இப்படி இருந்தால் மட்டுமே இறைவன் அருள்வான் என்று சொல்லுவதற்கு முன்னே ??

எப்படி இருந்ததாலும் அவன் அருளியதன் பயனே உன் இருப்பு என்பதால் இவ்வளவு நாள் அனுபவித்து வாழ்ந்து வந்த நீ !!

இப்படி இருந்தாலே இறைவன் அருள்வான் என்ற சொல்லக்கூட முடிகின்றது என்று உணர்வாயோ ??
களைந்து போகவே எல்லாம் சூட படுகிறது !!

என்னை எனக்கு சூடியவன் !!
எப்போது
என்னை களைத்து தன்னுள் சூடுவானோ ??

இயற்கை நெறி உணர்வோர் சிவ நெறியை உணர்வார் சிவ நெறியை உணர்வார்?? தன்னை அறியாமலேயே உருத்திராக்கம் நெற்றி நிறைய திருநீறு சிவ வழிபாடு சிவனை மட்டுமே வணங்கும் திருந்திய சைவராய் இருப்பார்
அவரே இன்புற வாழ்ந்து இறைவனடி சேர்வார்
#திருச்சிற்றம்பலம்

அற்புதத்தையும் ஆச்சரியத்தையும் நொடிப்பொழுதும் அனுபவித்து வாழ்ந்தும் !!

எதுவோ அற்புதம் ஆச்சரியம் என்று தேடிகொண்டே திரிகிறோம் !! அனுபவிப்பதால் எதோ ஓர் தடை வரும்போதே !!

எத்தகைய அற்புதத்தையும் ஆச்சரியத்தையும் கொண்டு வாழ்கின்றோம் என்ற மெய் புரிகிறது !!

ஆச்சர்யம், பயம், சோகம் இவை நிகழும் போதாவது, தும்மலின் போதாவது, வழக்கத்திலாவது எவனொருவன் என் நாமத்தை ஸ்மரிக்கின்றானோ (நினைக்கின்றானோ) அவன் பரம கதியை அடைகின்றான்.

மஹாபாபைரபி ஸ்ப்ருஷ்டோ தேஹாந்தே யஸ்து மாம் ஸ்மரேத்
பஞ்சாக்ஷரீம்வோச்சரதி ஸ முக்தோநாத்ர ஸம்ஸய:
(16,18)

மஹா பாவங்களினால் பற்றப்பட்டவனாயினும் எவன் மரண காலத்தில் என்னை ஸ்மரிப்பானோ அல்லது பஞ்சாக்ஷரத்தை உச்சரிப்பானோ, அவன் முக்தனாகின்றான். இதில் சந்தேகமில்லை.

எவன் தன்னையும் சகலதையும் சிவ ஸ்வரூபமாக அறிவினால் காண்கின்றானோ, அவனுக்கு க்ஷேத்திரங்களிலாவது தீர்த்தங்களிலாவது வேறு கர்மங்களிலாவது செய்யவேண்டியது யாதுளது?

ஸ்ரீ சிவ கீதை

சிவ பக்தியை விரும்புவோனாயினும் சரி, கர்மானுஷ்டானங்களோடு இருக்கின்றவனாயினும் சரி, அவ்வாறு இராதவனாயினும் சரி, அவன் விபூதி மற்றும் ருத்ராக்ஷங்களை அவசியம் தரித்துக் கொள்ளல் வேண்டும்.

எவன் ஒருவன் அக்னி ஹோத்திர விபூதியை அணிந்து ருத்திராக்ஷத்தைத் தரித்துக்கொள்கின்றானோ, அவன் பாவியே ஆயினும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான். இதில் சந்தேகமில்லை.

அந்யாநிசைவ கர்மாணிகரோது நகரோதுவா
சிவநாம ஜபேத்யஸ்து ஸர்வதா முச்யதேதுஸ:
(16,22)

ஏனைய சைவ ஆச்சாரங்களைக் கடைப்பிடித்தாலும் கடைப்பிடிக்காவிடினும், சிவ நாமாவையே எவன் ஒருவன் எப்போதும் ஜெபிக்கின்றானோ அவன் முக்தனாகின்றான்.

எந்த ஒரு மனிதன் அவனுடைய இறுதிக் காலத்தில் விபூதி ருத்திராக்கங்களைத் தரித்தவனாய் இருக்கின்றானோ அவன் மஹாபாப உபபாப ராசிகளால் ஸ்பரிசிக்கப்பட்டவனாய் இருந்தாலும் அம்மனிதனை எந்தக் காரணத்திற்காகவும் யமகிங்கரர்கள் அணுகுவதில்லை.

ஸ்ரீ சிவ கீதை

எவன் ஒருவன் வில்வ மரத்தின் அடியிலுள்ள மண்ணை சரீரத்தில் பூசிக்கொள்கின்றானோ, அவனை தூரத்தில் கண்டாலே யம தூதர்கள் விலகிவிடுவார்கள்.

தொடரும்…

ஓம் நம சிவாய!

பத்திக்கே வழி காட்டி,
பாவம் தீர்த்து,
பண்டை வினைப் பயம் ஆன எல்லாம் போக்கி,
தித்தித்து, என் மனத்துள்ளே ஊறும் தேனை
செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

– திருநாவுக்கரசு பெருமான்….

சிறுதொண்ட நாயனாருக்கு அருள் செய்த திருசெங்காட்டங்குடி இறைவன்…

💜உத்திராபதியார்💜

✍️: ….: 🔥 *_சிவமயம் சிவாயநம_*🔥

_திருச்சிற்றம்பலம்_

_நாம் பெற்றுள்ள உடம்பு , உயரம் , நிறம் , படிப்பு , வேலை , வயது , செல்வம் , மனைவி , மக்கள் , அறிவு , மொழி , இடம் ஆகிய யாவும் நாமாகக் கேட்டுப் பெற்றவை இல்லை._

*_நம் வினைக்கு ஏற்ப இறைவரால் கொடுக்கப்பட்டவை._* _இதைத் திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாக்கினால் பாா்ப்போம்._

*_வாய்த்தது நந்நமக்கு ஈதோா் பிறவி மதித்திடுமின்_*

*_பாா்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீா்_*

*_கோத்தன்று முப்புரந் தீவளைத்தான் தில்லை அம்பலத்துக்_*

*_கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பது அன்றே நந்தங் கூழைமையே._*

_நாமாகத் தேடியோ கேட்டோ இந்த மானிடப் பிறவி வரவில்லை. அப்படி இறைவரால் கொடுக்கப்பட்ட இப்பிறவியை நாம் மதிக்க வேண்டும். அதாவது சிவ புண்ணியத்திற்கே ( முத்தி நெறிக்கே ) பயன்படுத்த வேண்டும்._

_தங்கக் கலப்பையைக் கொண்டு கொள் விளைப்பதற்கு உழுவது போல , உடன் வாரத பொன் பொருள் போகங்கட்கு இப்பிறவியைப் பயன்படுத்துகிறோம்._ *_மானிடப் பிறவி கிடைத்தது கடலைப் கையால் நீந்தியது போலப் பேரும் பேறாகும்._*

*_சிவபெருமானாருக்கே அடிமையாக இருந்து அவரை நினைந்து உள்ளம் உருகி வழிபடுவதைக் கடமையாகக் கொண்டிருக்க வேண்டும்._*

*_எத்தனையோ பிறவிகளில் நாம் இதனை உணா்ந்து மதிக்காமல் வாய்ப்பினை நழுவ விட்டுவிட்டோம்._*

_இந்தப் பிறவியிலும் அவ்வாறு இருந்து விடக்கூடாது என்பதற்காகவே_ *_” மதித்திடுமின் “_* _என்கிறாா் திருநாவுக்கரசு சுவாமிகள்._

*_வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்தடைத்துச்_*

*_சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கின் அல்லால்_*

*_அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே_*

_உலக இன்பங்களில் மயங்கித திாிகின்ற , மெய்யறிவு சிறிதும் இல்லாத மனமே ! சிவபெருமானாா் நாம் உய்வடையும் பொருட்டு என்றும் அழியாத சொத்து ஒன்றை வைத்துள்ளாா். அதுதான்_ *_” சிவாயநம “_* _எனும் திருஐந்தெழுத்தாகும்._

*_மனத்தடைத்துச் சித்தம் ஒருக்கி_* _மனம் உலக விடயங்களில் சென்று விடாதபடி திருஐந்தெழுத்தை ( சிவாயநம )உள்ளிருத்தி அன்பினால் கண்ணீா் மல்க ஓதிவருதல் வேண்டும்._

_இதனால் ஆன்மா சிவத்தில் ஒடுங்கும். இதுவே இறைவருடைய திருவருளைப் பெற்று முத்தியடைய எளிய வழியாகும்._

_கடந்த பல பிறவிகளில் நிலையற்ற பொன்பொருட்களே நிலைத்த செல்வம் என்று எண்ணி ஏமாந்நுவிட்டோம். இப்பிறவியில் நிலையான சொத்து நமக்கு_ *_” சிவாயநம “_*_என்பதுதான் உறுதியாக எண்ணி வாழ வேண்டும்._

🔥

2 COMMENTS

  1. […] – *சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.* […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here