ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

௧ந்தர் அலங்காரம்

சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவிதான் கற்றறிந்தவரே !
– அருணகிரிநாதர்

பொருள் :

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

சினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள் ; யமனுடைய போருக்கும் அஞ்சமாட்டார்கள் : இருண்ட நரகக் குழியை அடைய மாட்டார்கள் ; கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள் ; புலி , கரடி, யானை முதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மணம் கலங்க மாட்டார்கள் ; கந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய கந்தரலங்காரத்தின் நூறு திருப்பாடல்களுள் ஒரு திருப்படாலையேனும் கற்று
அதன் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அவர்களாவர் ! .

இன்று

*வியாழக்கிழமை*

பிலவ வருடம்

ஆடி மாதம்

06ம் நாள் !

இன்று

ஜூலை மாதம் :

22ஆம் தேதி !!

(22-07-2021)

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

சூரிய உதயம் :
காலை : 06-01 மணி அளவில் !

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

இன்றைய திதி :
இன்று பிற்பகல் 12.41 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி !

இன்றைய நட்சத்திரம் :

இன்று மாலை 04-12 வரை மூலம் ! பின்பு பூராடம் !!

யோகம் : இன்று காலை 06.00 வரை யோகம் நன்றாக இல்லை ! பின்பு சித்தயோகம் !!

இன்று :

கீழ் நோக்கு நாள் !

நல்ல நேரம் :

காலை : 10-45 மணி முதல் 11-45 மணி வரை !

மாலை : 12-15 மணி முதல் 01-15 மணி வரை !!

சந்திராஷ்டமம் :
ரோகிணி ! மிருகசீரிஷம் !!

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

ராகுகாலம் :
பிற்பகல் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !

எமகண்டம் :
பிற்பகல் : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!

குளிகை :
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

சூலம் : தெற்கு !

பரிகாரம்: தைலம் !!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*வியாழக்கிழமை ஹோரை*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
காலை 🔔🔔

6-7. குரு. 💚 👈சுபம் ✔
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
10-11. புதன். 💚 👈சுபம் ✔
11-12. சந்திரன்.💚 👈சுபம் ✔

பிற்பகல் 🔔🔔

12-1. சனி.. ❤👈அசுபம் ❌
1-2. குரு. 💚 👈சுபம் ✔
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌

மாலை 🔔🔔

3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
5-6. புதன். 💚 👈சுபம் ✔
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✔

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
💚💚💚💚💚💚💚💚💚
சிவ சிவ

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை உண்டு

இந்த கதையும் படியுங்கள் சிவமே
***********************************

#மகாபலி மன்னன் புராணம் தெரிந்த அனைவருக்கும் அறிமுகமானவன்.

#பெருமாள் வாமன அவதாரம் எடுத்து அவனை ஆட்கொண்டார். முற்பிறவியில் இவன் மிகவும் கெட்டவனாக இருந்தான்.

எந்த நேரமும் விலைமாதரின் வீட்டிலேயே வீழ்ந்து கிடந்தான். அவர்களுக்கு பொருளை அள்ளிக் கொடுப்பதற்காக சூதாடச் செல்வான். சூதாட்டத்தில் வல்லவனான இவனை வெல்வார் யாருமில்லை.

எனவே, பெரும் பொருளுக்கு அதிபதியானான். ஒருமுறை பேரழகி ஒருத்தியை அடைய விரும்பினான்.

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

அவளோ அவனிடமுள்ள பணம் முழுவதையும் தனக்கு கூலியாகக் கேட்டாள்.

அவனும் அவளை அடையும் ஆசையில், பணத்துடன் சென்றான். வழியில் ஓரிடத்தில் மயக்கமாக வந்தது.

அப்படியே விழுந்து விட்டான். அவ்விடத்தில் ஒரு #சிவலிங்கம் இருந்தது. சற்றுநேரம் கழித்து கண்விழித்த அவன் சிவலிங்கத்தைப் பார்த்தான்.

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. பணம் முழுவதையும் #சிவலிங்கத்தின் முன் கொட்டிவிட்டு சென்றான். சிறிதுகாலம் பட்டினியாய் கிடந்த அவன் இறந்து போனான்.

எமதூதர்கள் அவனை இழுத்துச் சென்றனர். சித்திரகுப்தன் அவன் பாவ புண்ணிய கணக்கை வாசித்தார்.

#எமதர்மராஜா அதைக் கேட்டு விட்டு, அடேய் கொடுமைக்காரா, சூதாடியும், பரத்தையர் வீட்டுக்கு சென்று இன்பமாகவும் இருந்த நீ, நரகத்திற்கு செல், என ஆணையிட்டார்.

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

நடுங்கிப் போன அவன், தர்மராஜா, நன்றாகப் பாருங்கள். நான் ஒரு நன்மை கூட செய்யவில்லையா?

என்றான். கணக்கில் ஒரு இடத்தில் மட்டும், அவன் #சிவலிங்கத்தின் முன்பு பணத்தைக் கொட்டியதையும், அதைக் கண்டெடுத்த அர்ச்சகர் ஒருவர், லிங்கத்துக்கு கோயில் கட்டியதும் தெரிந்தது.

அநியாய வழியில் வந்த பணமாயினும், பொதுக்காரியத்துக்கு பயன்படுத்திய காரணத்துக்காக, அவனுக்கு மூன்று நாழிகை (72 நிமிடம்) மட்டும் இந்திரலோகத்தின் அரசு தலைமைப் பதவியை அனுபவிக்க எமதர்மன் அனுமதித்தார்.

சூதாடியும் இந்திரலோக பதவியை சுகமாக வகித்தான். இந்திரன் ஒன்றரை மணிநேரம் தானே என ஒதுங்கிக் கொண்டான்.

இந்நேரத்தில் அகத்தியரை அழைத்த சூதாடி, அவருக்கு இந்திரனின் #ஐராவதம் யானையை பரிசாகக் கொடுத்தான்.

விஸ்வாமித்திரருக்கு #உச்சைச்ரவா என்ற குதிரையையும், காமதேனு பசுவை வசிஷ்டருக்கும் கொடுத்தான். #கற்பகவிருட்ச மரத்தை கவுண்டின்ய முனிவருக்கும், #சிந்தாமணி என்ற ரத்தினத்தை காலவ முனிவருக்கும் தானமாக வழங்கினான்.

மூன்று நாழிகை கடந்ததும் அவனாகவே நரகத்தை நோக்கி நடந்தான். இதற்குள் தேவேந்திரன் எமனிடம்,

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

எமதார்மனே!!

என்ன காரியம் செய்தாய்?

சூதாடியை அரசனாக்கினாய். அவன் எல்லாவற்றையும் தானம் கொடுத்து விட்டான்.

இனி நான் எப்படி அரசாள்வது? என்றான்.

எமன் அவனிடம், இந்திரரே! தாங்கள் சொல்வது சரியல்ல.
அரசாட்சியில் இருப்பவன் தன்னிடமுள்ள விலை உயர்ந்த பொருட்களையும் தகுந்தவர்களுக்கு கொடுப்பதே முறையானது. நீங்கள் அதனை இத்தனை நாளும் செய்யவில்லை.

ஆனால், இவன் தனக்கு ஆட்சி கிடைத்த குறைந்த நேரத்தில் பலரது மனம் மகிழும்படி செய்தான்.

அந்த மகரிஷிகள் மக்களுக்கு அதன் மூலம் பலன் கொடுப்பார்கள். உங்களுக்கு இப்படி ஒரு மனம் என்றாவது வந்ததா?

ஸ்ரீ கந்தவேல் தரிசனம்

என்றான். இந்திரன் தலை குனிந்தான். இந்திரலோகத்தில் செய்த தானத்துக்காக சூதாடியின் நரக வாழ்க்கை ரத்து செய்யப்பட்டது.

அவன் உடனடியாக மறுபிறப்பெடுத்தான். முற்பிறவியில் சூதாடியாக இருந்த குற்றத்துக்காக அசுரகுலத்திலும், தானம் செய்த காரணத்துக்காக மகாபலி என்ற பெயரில் கொடையாளியாகவும் பிறந்தான்.

முற்பிறப்பில் #சிவத்தொண்டு செய்த அவன் இப்பிறப்பில் திருமாலின் திருவடி தரிசனம் கண்டு வைகுண்டத்தை அடைந்தான்.

சிவ சிவ

*ஸ்ரீ முருகன் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!*

*ஆத்மார்த்தம்..!*

*தெய்வீகம்..!.. பேரின்பம் …!!*

*அடியேன்*
*ஆதித்யா*

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here