ஸீதை வந்தாள்

🌸 வால்மீகி ராமாயணம் 🌸

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

🌸..பாகம்-147🌸
…..
யுத்த காண்டம்.
……………………
அத்தியாயம்-39
……………………………………….

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்!
………………………………..

தன் அருகில் குனிந்த தலையுடன் நின்று கொண்டிருந்த ஸுதையை, உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு, ராமர், தன் மனதில் எழுந்த எண்ணங்களை வார்த்தைகளில் வடிக்கத் தொடங்கினார்.

சிறப்புடையவளே! ஸீதா! யுத்த களத்தில் எதிரியை வென்று என்னால் மீட்கப் பட்டு நீஇங்கே நிற்கிறாய்.
மனித முயற்சியினால் செய்யத் தக்கது என்னால் செய்து முடிக்கப் பட்டது.
வேண்டுமென்றே எனக்கு இழைக்கப் பட்ட தீங்கு, அதனால் எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு, இவற்றை இழைத்த எதிரி- எல்லாமே என்னால் அழிக்கப் பட்டன.

இன்று என் ஆண்மை எல்லோராலும் பார்க்கப் பட்டது. இன்று என் முயற்சி பலனளித்தது. இன்று என் சபதம் நிறைவேறியதும், இன்று என் புகழ் நிலை நாட்டப் பட்டது.

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

நீ தனிமையில் இருந்த போது, உன்னைக் கடத்திச் சென்ற அரக்கனால் உனக்கு இழைக்கப் பட்ட தீமைக்கு, அந்த அரக்கன், மனிதனாகிய என்னிடமிருந்து உரிய தண்டனையைப் பெற்றான்.தனக்கு இழைக்கப் பட்ட அவமானத்திற்குப் பழி தீர்க்காத அற்ப மனிதன், எவ்வளவு தான் சக்தி படைத்தவனாக இருந்து என்ன பயன்?
புகழுக்குரிய ஹனுமான், கடலைத் தாண்டிச் சென்று இலங்கையில் நாசம் விளைவித்துப் புரிந்த பெரும் சாதனைக்கு, இன்று முழுமையான பலன் கிட்டியிருக்கிறது.

யுத்த களத்தில் தனது படையுடன் சேர்ந்து பெரும் வீரத்தைக் காட்டியும், நல்ல ஆலோசனை கூறியும் உதவிய ஸுக்ரீவனின் முயற்சிகளுக்கு, இன்று முழுமையான பலன் கிட்டியிருக்கிறது. நற்குணங்களற்ற ராவணனைவிட்டு, என்னிடம் வந்து சேர்ந்த விபீஷணனின் முனைப்புக்கு, இன்று முழுமையான பலன் கிட்டியிருக்கிறது.

வியப்பினால்கண்களை அகல விரித்து, ஒரு பெண் மான்போல் காட்சியளித்த ஸீதை, ராமர்பேசிய வார்த்தைகளை கண்கள் குளமாக, கேட்டுக் கொண்டிருந்தாள்.

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

ஸுதையைப் பார்த்தபோது, ராமரின் இதயம், மக்களிடையே ஏற்படக் கூடிய அவதூறுகளை நினைத்து துடியாய் துடித்தது. அங்கே நின்று கொண்டிருந்த வானரர்கள், அரக்கர்கள், ஆகியோர் முன்னிலையில் ராமர், தாமரை இதழையொத்த கண்களையுடையவளும், அழகிய கருங் கூந்தலும், சீரான அங்கங்களும் உடையவளுமான ஸீதையைப் பார்த்து, மீண்டும் பேசத் தொடங்கினார்.

என்னுடைய கௌரவத்தை நிலைநாட்டுவதற்காக, ராவணனைக் கொன்று, தீங்கிழைக்கப் பட்ட மனிதன் பழி வாங்க என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்து முடித்து விட்டேன்.

இல்லவன், வாதாபி ஆகிய அரக்கர்களின் கையில் சிக்கிய தென்திசை, மனிதர்களால் அணுக முடியாத நிலையில் இருந்த போது, அதை தான் செய்த தவங்களினால் தன்னையே உணர்ந்த அகஸ்திய முனிவர் வென்று மீட்டார். அதே போல ராவணன் வசம் நீ இருந்ததால், மனிதர்களால் அணுக முடியாத இடத்திலிருந்த உன்னை, தவங்களினால் தூய்மையடைந்த மனமுடையவனாகிய நான், வென்று வந்திருக்கிறேன்.

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

நீ ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய நண்பர்களின் உதவியோடு, வெற்றிகரமாக முடிந்துள்ள யுத்தம் என்கிற இந்தப் பெரும் முயற்சி- உன்னைக்கருதி மேற் கொள்ளப் பட்டது அல்ல. உனக்கு நலமுண்டாகட்டும்.

இழுக்கற்றதாக என்னுடைய வரலாற்றை நிலை நாட்டிக் கொள்வதற்கும், பல திசைகளிலிருந்து தோன்றக் கூடிய அவதூறைத் தவிர்ப்பதற்கும், என் குலத்திற்கு ஏற்பட்ட இழுக்கை நீக்குவதற்கும் தான், இந்தப் பெரும் முயற்சியை நான்மேற் கொண்டேன்.

உன்னுடைய சரித்திரம் பற்றிய சந்தேகம் தோன்றி விட்ட நிலையில் என் முன்னே நிற்கிற நீ, என் கண்ணை உறுத்துகிறாய்.
ஆகையால், ஜனக மன்னனின் மகளே! நீ எங்கு விரும்புகிறாயோ, அங்கு செல்! அப்படி நீ செல்வதற்கு நான் இப்போதே அனுமதி அளிக்கிறேன். எல்லா திசைகளிலுமே நீ செல்லலாம்.

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

இனி உன்னால் ஆக வேண்டிய து எனக்கு ஒன்றுமில்லை.
தன் மீது அன்பு காட்டியவள் என்ற ஒரே காரணத்திற்காக, மாற்றான் வீட்டில் வசித்த பெண்மணியை- தூய்மையானவனும்,, நற்குலத்தில் பிறந்தவனுமாகிய எந்த மனிதன் தான் ஏற்றுக் கொள்வான்?

தூக்கி செல்லப் பட்ட போது, ராவணனின் கைகளுக்கிடையே சிக்கியவளும், அவனால் கெட்ட நோக்கத்தோடு பார்க்கப் பட்டவளுமாகிய உன்னை, குலப் பெருமையில் அக்கறை கொண்ட என்னால் எப்படி ஏற்க முடியும்?
உன்னை வென்று மீட்டதால், எனக்கு இழைக்கப் பட்ட அவமதிப்பு, அழிக்கப்பட்டது. அதனால் என்னுடைய லட்சியம் அடையப் பட்டது.

ஆகையால், இனிமேல் உனக்கு என் மனதில் இடமில்லை.
நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பேசியவாறே, நடந்து கொள்ளப்போகும் தீர்மானத்துடன் தான் இதை நான் சொல்கிறேன்.
உன் மனவிருப்பத்திற்கேற்ப லக்ஷ்மணனுடனோ, பரதனுடனோ நீ வாழலாம்.
அல்லது சத்ருக்னனுடனோ, ஸுக்ரீவனுடனோ அரக்கனாகிய விபீஷணணுடனோ, இருப்பதற்கு நீ முடிவெடுத்தாலும், அது உன் இஷ்டமே!
உன் மனம் எதை விரும்புகிறதோ, அதைச் செய்.

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

பார்ப்பதற்கு மிகவும் அழகியவளும், மனதைக்கவர்கிற தோற்றமுடையவளுமாகிய நீ, ராவணனுடைய இடத்திலிருந்த போது, அவன் உன்னிடமிருந்து பிரிந்திருப்பதை நெடுங்காலம் எளிதில் தாங்கியிருக்க மாட்டான்.

(ஸீதையிடம் ராமர் நடந்து கொண்ட முறை, சற்றும் ஏற்கத் தக்கதாக இல்லை. இப்படிப்பேசியதற்கான காரணத்தை பின்னர் அவரே கூறுகிறார்.அதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை. ராமர் கூறுகிற காரணத்தைப் பார்க்கிறபோது, இவ்விஷயம் பற்றிய என் கருத்தை விவரிக்கிறேன்.

அது ஒரு புறமிருக்க, கம்ப ராமாயணத்திலும் ஸீதையைப் பார்த்து, ராமர் பேசுகிற சுடு சொற்கள் விஸ்தாரமாகவே கூறப் பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.உன்னை மீட்டு அழைத்துக் கொள்வதற்காக, கடலை நிரப்பி அடைத்து, மின்னலையொத்த ஆயுதங்களையுடைய அரக்கர்களை வேரோடு அழித்து, மேலும் போர் செய்து, பெரும் பகைவனாகிய ராவணனை நான் அழிக்கவில்லை.

மனைவியைக் கவர்ந்து சென்றவனைப் பழி தீர்க்காதவன்- என்ற பிழை வராமல் என்னை மீட்டுக் கொள்வதற்காகவே, நான் இலங்கை வந்து பகைவரை வென்றேன்” என்று ராமர் கூறுகிறார்.

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

என் மீது அன்பு நீங்கியவளே! மிருகங்களின் மாமிசத்தை அமிர்தத்தை விட சுவை மிக்கதாக நினைத்து, அங்கே நீ உட்கொண்டாய் அல்லவா? மதுவைக் குடித்தாயே! உன்னோடு முன்பு உறவு கொண்ட எங்களுக்கும், அந்த விருந்தைப் படைக்க நினைத்தாயோ? என்றும் ராமர் கேட்பதாகக் கம்பர் கூறுகிறார்.

ராமரின் கொடிய வார்த்தைகள் இப்படித் தொடர்வதாகக் கம்பர் சொல்கிறார். பெண்களுக்குரிய குணங்கள், இழி குணம் இல்லாமை, உயர் குலப் பிறப்புக்கேற்ற இயல்பு, பதிவிரதா தர்மம் உன்கிற அசையா நிலை, நல்லொழுக்கம், அறிவுத்தேர்ச்சி, புகழ் , பொய்யொழுக்கம் இல்லாமை ஆகிய இவை- நீ ஒருத்தி தோன்றியதால், வள்ளல் தன்மை இல்லாத அரசனுடைய கீர்த்தி அழிவது போல, அழிந்து தீர்ந்தன.

உயர் குலத்துப் பெண்கள், தங்களுடைய கணவர்களைப் பிரியநேரிடும் போது, இந்திரியங்களை அடக்கி வைப்பார்கள். நல்லொழுக்கத்தை உறுதியாக க் கொண்டு, தலைமுடியை சடையெடுக்கும் படி விட்டு, தடையில்லாத, ஒப்பற்ற தவமுடையவர்களாக இருப்பார்கள். ஒரு பழி இடையே வந்து சேர்ந்தால், தங்கள் உயிரை விட்டு, அப்பழியைப்போக்கிக் கொள்வார்கள்” என்று மேலும் கூறி, இறுதியில், நான்மேலும் கூற வேண்டியது என்ன இருக்கிறது? உனது தீய ஒழுக்கம், என் மனதை அறுக்கிறது.

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

நீ இப்போது செய்யத் தக்கது என்னவென்றால்-இறந்து ஒழி! அதில்லையென்றால், உனக்குத் தக்கவென்று தோன்றும் இடத்திற்குச் சென்றுவிடு- என்று கூறினான் ஞானிகள் மனதில் வீற்றிருக்கும் ராமன், இவ்வாறு இந்தக் கட்டத்தை முடிக்கிறார் கம்பர்.

மனதிற்கு இனிய வார்த்தைகளைக்கேட்டே பழகி விட்ட பெருமைக்குரிய ஸீதை ராமர்பேசிய ஏற்கத் தகாத வார்த்தைகளைக்கேட்டு, கண்ணீர் சிந்தியவாறு நின்றாள். பிறகு, ஒரு பெரிய யானையின் துதிக்கையினால் அறுத்து எறியப் பட்ட கொடி போல காட்சியளித்துக் கொண்டு அழுதாள்.

சுட்டெரிக்கும் சொற்களைப்பேசினார் ராமர்

இதுவரை தான் கேட்டறியாத சொற்களையெல்லாம், பலர் முன்னிலையில் ராமர் பேசக் கேட்டு, வெட்கித் தலை குனிந்து நின்ற அவள், கொடிய வார்த்தைகள் எனும் அம்புகளினால் துளைக்கப் பட்டவளாக அழுதாள். பின்னர், முகத்தைத் துடைத்துக் கொண்டு, நா தழுக்க தழுக்க , அவள் ராமரைப் பார்த்துப்பேசத் தொடங்கினாள்.
………………………………………………
….

தொடரும்… 🌸

My Youtube channel Please subscribe

https://www.youtube.com/watch?v=IZcjAIFM81g
….

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here