ஸீதை வந்தாள்

🌸 வால்மீகி ராமாயணம் –

🌸..பாகம்-146🌸
…..
யுத்த காண்டம்.
……………………
அத்தியாயம்-38,
…………………
ஸீதை வந்தாள்!

…………………….
நீங்கள் கூறிய இந்தப் பாராட்டு தான் மதிப்பிட முடியாதது. தேவர்களின் அரசாட்சியையும் விட, இது மேலானது” என்று ஸீதைக்கு நன்றி கூறிய ஹனுமான், தொடர்ந்து, ” நீங்கள் அனுமதித்தால், உங்களுக்குக் காவலாக இருந்து, உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த இந்த அரக்கிகளையெல்லாம், ஒரு நொடியில் நான் அழித்து விடுவேன்.

கணவன் மீது மாறாத அன்பு கொண்ட உங்களிடம் கொடிய உருவம் படைத்தவர்களான இவர்கள், பேசிய கொடூரமான வார்த்தைகள் என் நினைவில் நிற்கின்றன. அனுமதி கொடுங்கள், இவர்களை நான் கொல்கிறேன்” என்று கூறினார்.

ஸீதை , ஹனுமானுக்கு நிதானத்துடன் பதிலளித்தாள். அரசனின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டிய நிலையிலுள்ள இந்தப் பெண்மணிகள் மீது கோபம் கொள்வது முறையல்ல.

ஸீதை வந்தாள்

விதியின் செயல் காரணமாகவோ, நான் முன்பு செய்த ஏதோ ஒரு பாவத்தின் காரணமாகவோ, இங்கே நான் துன்பத்தை அனுபவிக்கிறேன். நம்முடைய வினைப் பயனைத் தானே நாம் பெறுகிறோம். விதி மிகவும் வலிமை வாய்ந்தது.

எனக்கு இந்த அனுபவமெல்லாம் நேரிட வேண்டும் என்பது ஏற்கெனவே நிச்சயிக்கப் பட்டிருப்பது. ராவணனின் அடிமைகளான இவர்களின் செயல்களை நான் மன்னிக்கிறேன். ராவணன் கூறியதால் தான் அவர்கள் என்னை அச்சுறுத்தினார்கள். இப்போது ராவணனே இறந்து விட்டதால், அவர்களுடைய அச்சுறுத்தலும் நின்று விட்டது.

ஒரு புலியின் முன்னிலையில்ஒரு கரடி பேசியதாகக் கூறப் படுகிற தர்மம் நிறைந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்கேள். மற்றவர்களால் தனக்கு இழைக்கப் பட்ட தீங்கை, மேலான தன்மை படைத்தவர்கள் மனதில் கொள்வதில்லை.

தீங்குக்கு பதில் தீங்கு இழைப்பதில்லை என்கிற விரதத்தை என்றும் கடைப்பிடிக்க வேண்டும். நல்லவர்களிடம் மட்டுல்லாமல், பாவிகளிடமும் கொல்லப் படத் தக்கவர்களிடமும் கூட, நற்குணம் உடையவன் கருணை காட்டுவான்.

ஸீதை வந்தாள்

ஸீதை வந்தாள்

எப்போதும் தவறே செய்யாதவன் என்பவன் எவனும் கிடையாது. அப்படியிருக்கையில் குரூரமானவர்கள் இடத்திலும் கூட கருணை காட்டுவது தான் நற்செயல். நல்லவர்களுக்கு நன்னடத்தைத் தான் ஆபரணம்.

( புலியின் முன்னிலையில் கரடி பேசிய வார்த்தைகள்” என்று ஸீதை குறிப்பிடுகிற விஷயத்தை ப் பற்றி ராமாயண விளக்கவுரைகள் கூறும் விவரம் இது. ஒரு புலி, ஒருவேடனைத் துரத்தியது.

வேடன் ஒரு மரத்தின் மீது ஏறினான். அங்கே ஒரு கரடி அமர்ந்திருந்தது. மரத்தின் அடிக்கு வந்த புலி, கரடியைப் பார்த்து, ” இதோ பார்! நீயும் நானும் இந்த வனத்திலே வாழும் சகோதரர்கள்.இந்த வேடனோ நமக்குப் பொது எதிரி. ஆகையால், அவனை மரத்திலிருந்து கீழே என்னிடம் தள்ளிவிடு” என்று கூறியது.

ஆனால் கரடியோ, நான் இருக்கும் இடம் நாடி வந்து விட்டதால், இவன் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். ஆகையால் அவனை நான் கீழே தள்ள முடியாது. அப்படிச் செய்தால், நான் என் கடமையிலிருந்து தவறியவனாவேன்” என்று கூறிவிட்டு, தூங்கத் தொடங்கி விட்டது.

ஸீதை வந்தாள்

அப்பொழுது வேடனைப் பார்த்து, அந்தப் புலி, அந்தக் கரடியை நீ கீழே தள்ளிவிடு. அதை உணவாக உட்கொண்டு, உன்னை நான் விட்டு விடுகிறேன். என்று கூறியது.இதைக்கேட்ட வேடன், தான் தப்பித்தால் போதும் என்று உறக்கத்தில் இருந்த கரடியை மரத்திலிருந்து தள்ளினான்.

ஆனால், கரடி கரடி சாமார்த்தியமாக ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் புலியிடமிருந்து தப்பி, அந்த மரத்திலேயே நின்றது. அப்போது புலி மீண்டும் கரடியைப் பார்த்து, உன்னைக் கீழே தள்ளிவிட முயற்சித்து, நன்றி கொன்று, உனக்கு இந்தவேடன் தீங்கிழைத்தான்.

ஸீதை வந்தாள்

ஆகையால் இப்போது நீ அவனை கீழே தள்ளிவிடு” என்று கூறியது. ஆனால் கரடியோ அப்படிச் செய்யமறுத்து, மேலே ஸீதை கூறிய வார்த்தைகளை தனக்குத் தெரிந்த நியாயமாக எடுத்துக் கூறியது. அதைத் தான் ஸீதை இங்கே ஹனுமானிடம் குறிப்பிடுகிறான்)

ஸீதையின் பேச்சைக்கேட்ட ஹனுமான், ராமருக்கு ஏற்ற மனைவி தாங்கள்!ஆகையால் தான் இப்படி பேசுகிறீர்கள். தாயே! ராமர் அனுப்பிய செய்திக்கு உங்கள் பதிலைத் தெரிவியுங்கள். அதைத் தாங்கி நான் ராமரிடம் செல்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.

ஸீதை, ” தன்னை நம்புகிறவர்களைக் கைவிடாமல், அவர்கள் மீது அன்பு வைக்கிற என் கணவர் ராமரைப் பார்க்க, நான் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று மட்டும் கூறினாள். இதைக்கேட்டுக் கொண்ட ஹனுமான், ” பௌர்ணமி நிலவையொத்த ராமரின் முகத்தை இன்றே நீங்கள் காணத் தான்போகிறீர்கள்! எதிரிகளை வென்று நண்பர்கள் புடை சூழ, லக்ஷ்மணனோடு சேர்ந்து நிற்கிற ராமரை இன்றே பார்ப்பீர்கள்! என்று கூறிவிட்டு, ஸீதையிடம் விடை பெற்று ராமர் இருக்கும் இடத்தைச் சென்று அடைந்தார்.

ஸீதை வந்தாள்

ஸீதை வந்தாள்

அவரை வணங்கி நின்று,” தெய்வத்தை நிகர்த்த உங்கள் மனைவி துக்கத்தினால் வாடிப்போயிருக்கிறார். உங்களுடைய மாபெரும் வெற்றியைக்கேள்விப் பட்டு, உங்களைக் காண ஆவலுடன் அவர் காத்திருக்கிறார். கண்கள் குளமாகி நிற்க, என் கணவரைக் காண விரும்புகிறேன்” என்பதே என் மூலமாக அவர் கூறி அனுப்பியுள்ள செய்தி.
ஹனுமான் கூறியதைக்கேட்ட போது, ராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் கண்களில் நீர் மல்கியது.

பெரு மூச்சு விட்டுக் கொண்டு பூமியையே பார்த்தவராக விபீஷணனிடம், விதேஹதேசத்து அரச குமாரி ஸீதையை நீராட்டி, நல்ல ஆபரணங்களை அணிந்தவளாக இங்கே அழைத்து வரப் படட்டும். தாமதம் வேண்டாம்” என்று கூறினார்.
தனது அரண்மனைக்கு விரைந்த விபீஷணன், அங்கே இருந்த பெண்மணிகள் மூலமாக ராமர் கூறிய செய்தியை ஸீதைக்குத் தெரிவித்தான்.

ஸீதை வந்தாள்

பின்னர் ஸீதையை நேரில் சென்று பார்த்து, கரம் குவித்தவனாக, நீராடி, நல்ல ஆபரணங்கள் அணிந்து, பல்லக்கில் ஏறி அமர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களுக்கு எல்லா நலமும் உண்டாகட்டும். உங்கள் கணவர் உங்களைக் காண விரும்புகிறார்” என்று பணிவோடு கூறினான்.

ஸீதை” இப்படியே என் கணவரை உடனே வந்து பார்க்கிறேனே” என்று கூற, விபீஷணன், ” அவர் குறிப்பிட்டுக் கூறினார் என்பதால்” அவர் சொன்ன மாதிரியே தாங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினான்.

கணவனை தெய்வமாகக் கருதிய ஸீதை, அப்படியே ஆகட்டும் ” என்று கூறி, ராமர் கூறியவாறே செய்து, மிகச் சிறந்த பல்லக்கில் ஏறி அமர்ந்தாள்.
அழகான ஆபரணங்கள் அணிந்து, பல்லக்கில் அமர்ந்து ஸீதை வருவதை விபீஷணன், ராமருக்குத் தெரிவித்தான்.

ஸீதை வந்தாள்

ஓர் அரக்கனுடைய இல்லத்திலே நெடுங்காலம் வாழ்ந்த ஸீதை வந்து கொண்டிருக்கிறாள் என்பதைக்கேட்டு ராமரின் மனம் துன்பத்தையும், இன்பத்தையும் ஒரு சேர அனுபவித்தது.ஸீதையை விரைவில் தன் முன் அழைத்து வருமாறு அவர் விபீஷணனைக்கேட்டுக் கொண்டார்.

ஸீதையின் பல்லக்கைச் சுற்றி, பெரும்ஆவலோடு கூடி விட்ட வானரர்களை விலக்கி, ஸீதைக்கு வழி விடுவதற்காக விபீஷணனும், மற்ற அரக்கர்களும் வானரர் கூட்டத்தைக் கலைப்பதில் முனைந்தார்.இப்படி விரட்டப் பட்ட போது, வானரர்கள் பெரும் சப்தத்தை எழுப்பினர்.

ஸீதை வந்தாள்

ஸீதை வந்தாள்

இந்தக் காட்சியை தூரத்தில் இருந்து பார்த்த ராமர் கோபமுற்று, விபீஷணனைப் பார்த்து, எதற்காக வானரர்களை இப்படி ஹிம்சை செய்கிறாய்? உடனே இந்தக் கொடுமையை நிறுத்து! வானரர்கள் என்னவர்கள்” என்று கூறி விட்டு மேலும் தொடர்ந்து பேசினார்.

சிறந்த அரண்மனையோ உயர்ந்த ஆடைகளோ, கோட்டை மதில் சுவரோ, அரச மரியாதைகளோ,-ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பவை அல்ல. அவளுடைய நன்னடத்தை ஒன்றுதான் அவளுக்கு உண்மையான பாதுகாப்பு.

அது தான் அவளுடைய கேடயம். பொதுமக்கள் நடுவில் ஒரு பெண் வருவதும்- சோதனை காலங்கள், ஆபத்து நேரங்கள் மற்றும் சுயம்வரம், யாகம், விவாஹம் ஆகிய சமயங்களில் ஏற்கக் கூடியதே. ஸீதை துன்புற்று துயரில் வீழ்ந்து கிடக்கிறாள்.

ஸீதை வந்தாள்

ஆகையால், பொது மக்கள் மத்தியில்- அதுவும் என் முன்னிலையில்- அவள்தோன்றுவதில் தவறில்லை. ஆகையால் பல்லக்கை விட்டு இறங்கி கால்நடையாகவே ஸீதை என் முன்னிலைக்கு வரட்டும். விதேஹ தேச அரச குமாரியை வானரர்கள் பார்க்கட்டும்” என்று கடுமையுடன் பேசினார்.

( கம்ப ராமாயணத்தில், ராமர் வென்ற செய்தியை ஸீதைக்கு ஹனுமான் தெரிவிக்கும்போது, பெண்களுக்குரிய பேதமையை உடையவளே! மங்களமுண்டாகியது. நீ வாழ்வாயாக. மங்கள முண்டாகியது.

தீச்செயலின் எல்லையெனத் திகழ்ந்த அரக்கனாகிய ராவணனை, நன்கு மதிக்கத் தக்கவனாகிய ராமபிரான் என்கிற பட்டத்து யானை, மிதித்து அழித்து விட்டது. மங்கள முண்டாயிற்று” என்று தொடங்குகிறார்.

ஸீதை வந்தாள்

இதன் பிறகு ஹனுமான், அரக்கினளைக் கொல்ல ஸீதையிடம் அனுமதி கேட்கும்போது, ஸீதை பதில் கூறுவதற்கு முன்பாகவே அவர்கள் பயந்து போய், ஸீதையின் பாதுகாப்பை நாடுகிறார்கள். அதன் பிறகு தான் ஸீதை, ஹனுமானுக்கு நல்லுபதேசம் செய்கிறாள்.

நீராடி ஆபரணம் தரித்து வருமாறு விபீஷணன் கேட்டுக் கொள்ளும்போது, ஸீதை, ” நான் இங்கே இருந்த கோலத்திலேயே என்னை ராமரும், அங்கே இருக்கிற முனிவர்கள் கூட்டமும், மற்றவர்களும் பார்க்கட்டுமே” என்று கூறுகிறாள்.

வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு இல்லை” அதில் உடனே ராமரைப் பார்க்கும் விருப்பத்தைத் தான் ஸீதை தெரிவிக்கிறாள். விபீஷணன் மீண்டும் கேட்டுக் கொண்டவுடன், நீராடிப் புறப் பட சம்மதித்த ஸீதையை, தேவப் பெண் மணிகள், வந்து நீராட்டியதாக, கம்ப ராமாயணம் கூறுகிறது. வால்மீகி ராமாயணத்தில் இதுவும் இல்லை.

பின்னர் பல்லக்கில் அழைத்து வரப் படுகிற ஸீதையைப் பார்க்க, வானரர்கள் கூட்டமாகக் கூடியதாகவும், அவர்களை விலக்க விபீஷணன் முயன்ற போது, ராமர் தடுப்பதாகவும் வால்மீகி ராமாயணம் கூறுவதைப் பார்த்தோம். ஆனால் கம்ப ராமாயணத்தில் –ஸீதை,தேவ மாதர்களுடன் விமானத்தில் அழைத்து வரப் படுகிறாள். ராமரை நெருங்குகிறபோது, தேவர்களும் ரிஷிகளும், அவர்களுடைய மனைவிமார்களும், ஸீதையை நெருங்குகிறார்கள்.

ஸீதை வந்தாள்

அரக்கர்கள் அவர்களை துரத்துகிறார்கள். அப்போது பெரும் சப்தம் உண்டாகிறது. அதைக்கேட்டுத் தான் ராமருக்குக்கோபம் வருகிறது. இப்படி வால்மீகிராமாயணத்திலிருந்து சில மாறுதல்கள் இந்நிகழ்ச்சிகள் தொடர்பாக கம்ப ராமாயணத்தில் காணப் படுகின்றன)

ஸீதை வந்தாள்

ராமர் கோபமாகப்பேசிய போது சிந்தனையில் ஆழ்ந்த விபீஷணன், அவர் கூறியவாறே ஸீதையை, அவருடைய முன்னிலைக்கு அழைத்துச் சென்றான். ராமரின் உத்திரவைக்கேட்டு, லக்ஷ்மணன் , ஸுக்ரீவன், ஹனுமான்ஆகியோர் மனம் வருந்தினர். ஸீதையின் பால் அன்பு குறைந்த அவருடைய தோரணையைப் பார்த்து, அவருக்கு ஸீதையின் மீது ஏதோ மன வருத்தம் இருக்கிறது என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

ஸீதை வந்தாள்

ஸீதை அடக்கத்துடன், ராமருக்கு முன்வந்து நின்று, பெரும் மகிழ்ச்சியுடனும், பொங்கி வரும் அன்புடனும், அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவருடைய முகத்தைப் பார்த்த அந்த நொடியிலேயே அவளுடைய களைப்பு நீங்கியது. தன்னை மநைத்த மேகங்கள் விலகுகிற போது, முழுப் பொலிவுடன் காட்சி தருகிற பௌர்ணமி நிலவு போல் அவள் தோற்றமளித்தாள்.
…………………………………………..

தொடரும்… 🌸

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here