வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்

🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ

🌸..பாகம்-130🌸

…..

யுத்த காண்டம்.

……………………

.அத்தியாயம்-22

………………………..

வானரப் படை சிதறியது!

……………………………………

மேன்மை பொருந்திய குலத்தில் பிறந்திருந்தாலும் உனக்கு அகங்காரமும் மடமையும் அதிகமாக இருக்கிறது. கூர்மையான அறிவில்லாததால் எந்தநேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ள உன்னால் முடியவில்லை” என்று கும்ப கர்ணனைப்பார்த்துப் பேசத் தொடங்கிய மஹோதரன் மேலும் சொன்னான், எது செய்யத் தகுந்தது? எது செய்யத் தகாதது என்பதை அறியாதவரல்ல நமது மன்னர்.

அவருக்குக் காலம், இடம், ஆகியவற்றின் தன்மையும் , தனக்கு எது சரியான தருணம் என்பதும் நன்கு தெரியும். மேலும், தன்னுடைய பலம் மற்றும் பலவீனம், எதிரியின் பலவீனம் மற்றும் பலம்- ஆகியவை எல்லாமே அவருக்குத் தெரிந்து தான் இருக்கின்றன.

அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய மதி படைத்தவன் அல்ல நீ. ஆகையால் தான் அவை ஒன்றுக் கொன்று முரண்பட்டவை என்ற வகையில் பேசுகிறாய்.

அறம், பொருள், இன்பம் மூன்றுக்குமே செயல்பாடு என்பது வேர் போன்றது. அந்தச் செயல் பாடுகளைப்பொறுத்துத் தான்பாவமும், புண்ணியமும் ஒரு மனிதனை வந்தடைகின்றன.

அறத்தின்பாற்பட்ட செயல்பாடு கூட, ஊக்கமின்றி செய்யப் பட்டால், அதன் பலன் மாறிப்போகிறது. பொருளின் பாற்பட்ட காரியங்களில் சிறிய தவறு கூட இழப்புக்குக் காரணமாகி விடுகிறது. ஆனால், இன்பத்தைத்தேடியே ஒருவன் விடா முயற்சியுடன் முனைந்தால், அவன் இந்தப் பிறவியிலேயே அதை அடைகிறான்.

ஆகையால், இன்பத்தை நாடுகிற மன்னரைத் தடுப்பதில் அர்த்தமில்லை. பார்க்கப்போனால், அவருடைய செயல் நமது விரோதியை எதிர்த்துச் செய்யப் படும் மிகவும் துணிவுள்ள காரியமாகும், அப்படிப் பட்ட செயலில் என்ன தவறு இருக்கிறது?

மஹோதரன் தொடர்ந்தான். இது ஒரு புறமிருக்க தனித்தே யுத்தத்திற்குச் செல்ல நீ எடுக்கிற முடிவு பற்றியும் என் அபிப்பிராயத்தைக் கூற விரும்புகிறேன்.ஜனஸ்தானத்தில் எண்ணற்ற அரக்கர்களை தனி ஒருவனாக நின்றுஅழித்த அந்த ராமனை, உன் ஒருவனால் தனித்து எப்படி வெல்ல முடியும்?ஜனஸ்தானத்தில் ராமனிடமிருந்து தப்பி ஓடி வந்த பெரும் பலம் படைத்த அரக்கர்கள், இன்றும் கூட ராமனை நினைத்து நடுங்கிக் கொண்டே வாழ்கிறார்கள் என்பது நீ அறியாததல்ல, ராமன்கோபம் கொண்ட சிங்கம். தூங்குகின்ற அந்தப் பாம்பை சீண்டி விட நீ நினைக்கிறாய்.வால்மீகி ராமாயணம் பாகம்-45மரவுரி அணிந்த மூவர்

அந்த ராமனை எதிர்த்து நிற்கும் போது, நமது படை முழுவதற்குமே கூட ஆபத்து உண்டாக முடியும். நெருங்க முடியாத காலன் போன்றவன் அவன்.ஆகையால் நீ தனித்தே சென்று ராமனை எதிர்ப்பது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. இந்திரனையும், சூரியனையும், நிகர்த்தவனும், மனிதர்களிலே தனக்கு நிகரில்லாதவனுமாகிய ராமனை யுத்தத்தில் எதிர்க்க முடியும் என்ற நினைப்பு உனக்கு எப்படி வந்தது?

இப்படி கும்பகர்ணனைப் பார்த்து ஏளனமாகப்பேசிய மஹோதரன்,அதன் பின்னர் ராவணனைப் பார்த்து, தன் கருத்தைக் கூறத் தொடங்கினான். ஸுதையை அபகரித்து வந்த நீங்கள் வீணாக ஏன் காலம் கடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? அவளைப் பணிய வைத்தே தீருவது என்று நீங்கள் முடிவெடுக்கும்நேரத்தில், அவள் உங்களுக்குப் பணிவாள்.

அதற்கான ஒரு வழியை நான்யோசித்து வைத்திருக்கிறேன். அந்த வழியை நான் கூறக்கேட்ட பின்னர், உங்கள் அறிவுக்கு அது ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தோன்றினால், அதன் படி நீங்கள் நடக்கலாம். த்விஜிஹ்வன், ஸ்ம்ராதி, கும்பகர்ணன், விதர்தனன், மற்றும் நான்- ஆகிய ஐவரும் ராமனோடு சண்டையிடச் செல்கிறோம் என்று முரசு கொட்டி அறிவியுங்கள்.

நாங்கள் யுத்த களத்திற்குச் செல்கிறோம். உங்களுடைய விரோதிகளை நாங்கள் உண்மையிலேயே வென்று விட்டால், அத்துடன் காரியம் தீர்ந்தது- யுக்தி எதுவும் தேவையில்லை.

மாறாக, ராமனைக் கொல்ல முடியாமல் எங்கள்உடல் முழுவதும் காயங்களோடு நாங்கள் திரும்பினால், அப்போது என் மனதில்தோன்றிய திட்டத்தைச் செயல் படுத்தலாம். ராமனால் கடுமையாகத் தாக்கப் பட்டு, ரத்தம் தோய்ந்த உடல்களுடன் நாங்கள் அரண்மனைக்கு வந்து, உங்கள் காலடியைப் பற்றிக் கொண்டு, ” வெற்றி! ராமனையும், லக்ஷ்மணனையும் நாங்கள் கொன்று விழுங்கி விட்டோம்” என்று சொல்கிறோம். நீங்கள் எங்களுக்குப் பல பரிசுகளை அளியுங்கள்.

பின்னர் நகரம், முழுவதும் முரசு கொட்டி ராமனும், லக்ஷ்மணனும் அவர்களுடைய படையினரும் அழிந்தனர் என்று அறிவியுங்கள். பணியாட்களுக்கெல்லாம் பரிசுகளை வாரி வழங்குங்கள். நீங்களும் மது அருந்தி இன்பத்தில் திளையுங்கள். இந்தச் செய்திகள் நிச்சயமாக ஸீதையைச் சென்றடையும். அந்த நிலையில் அவளை அணுகி, அவளுக்கு தங்க நகைகளையும் பலவித பரிசுகளையும், அளித்து அவளுடைய ஆசையைத் தூண்டுங்கள். வானரப் படை சிதறியது2

தனக்குப் பாதுகாப்பாக இருந்த ராமன் போய் விட்டான் என்ற நிலையில் அவள் உங்கள் வசமாவாள். இது பெண்மைக்குரிய பலவீனம். இனி தன்னுடைய மகிழ்ச்சி உங்களைப் பொறுத்துத் தான் இருக்கும்- என்று செல்வத்திலே வளர்ந்த அந்த ஸீதை முடிவு செய்து, முழுமையாக உங்களுடையவள்ஆவாள். எனக்குத் தெரிந்து இது தான் சிறந்த வழி.

இவ்வாறு தனது திட்டத்தை விவரித்த மஹோதரன் இறுதியாக ” ராமனை எதிர்க்க நேரிட்டால் தங்களுக்கு அழிவு நிச்சயம்.ஆகையால் எந்த வித சண்டையும் இல்லாமல், பெருமு் மகிழ்ச்சியை எய்தக் கூடிய இந்த வழியை மேற் கொள்வது தான் நல்லது.

அரசனே! யுத்தமின்றி எதிரிகளை வென்று விடுகிற மன்னன் நீண்ட காலம் புகழோடு வாழ்ந்து, தன்னையும் தன் மக்கைளையும் அழிவிலிருந்து காப்பாற்றுகிறான்” என்று சொல்லி முடித்தான்.

ராவணனைப் பார்த்து கும்பகர்ணன்,” உங்களுக்குத் தோன்றியிருக்கும் பயத்தை விலக்குகிறேன். நான் சொன்னபடியேயுத்த களத்தில் ராமனைக் கொல்கிறேன். சாதிக்க முடியாதது என்று மற்றவர்கள் நினைப்பதை ஒ ரு வீரன் சாதித்துக் காட்டுகிறான். அப்படிப் பட்ட வீரன் பேசுகிற வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல.

மழையைத் தாங்காத மேகங்கள் இடியை உண்டாக்குவதுபோல, வீரன் வெறும் சப்தத்தை எழுப்புவதில்லை. யுத்த களத்திலே நான் செய்யப்போகிற கர்ஜனை , என்னுடைய போர்த்திறனை உலகிற்கு அறிவிக்கும். உங்கள் எதிரி தொலைவான். நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

இவ்வாறு ராவணனை ப் பார்த்துக் கூறி விட்டு கும்பகர்ணன், மஹோதரனைப் பார்த்துப்பேசத் தொடங்கினான். ” கோழை களாகவும், அறிவற்றவர்களாகவும் இருந்து கொண்டு, தங்களை விவேகம் மிக்கவர்களாக நினைக்கிற மன்னர்கள், நீ கூறியது போன்ற ஆலோசனையை ஏற்பார்கள்.

மஹோதரா! யுத்த களத்தில் கோழைகளாக நடந்துகொண்டு, மன்னனுக்குப் பிடித்தவற்றையே பேசுகின்ற உன் போன்றவர்களால் எல்லா காரியங்களுமே கெட்டுப்போகின்றன. இலங்கையின் கஜானா காலியாகிக் கொண்டிருக்கிறது. படை நாசமடைந்து கொண்டிருக்கிறது.

குடி மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். மன்னன் தனிமைப் படுத்தப் பட்டு விட்டான். இந்த நிலையில் மன்னனுக்கு நெருக்கமாகி விட்ட சிலர், விரோத எண்ணத்தை மனதிலே வைத்துக் கொண்டு, நண்பர்களைப்போல் நடித்துக் கொண்டு அவனைக் சூழ்ந்து நிற்கிறார்கள். இந்த நிலை மன்னனுக்குப் புரியட்டும்.

இவ்வாறு கூறிய கும்பகர்ணன் முடிவாக, ” மஹோதரா! தவறான ஆலோசகர்களாகிய உன் போன்றவர்கள் ஆரம்பித்து வைத்த மிகப் பெரிய ஆபத்தைமுடித்து வைக்க, நான் யுத்த களம் செல்கிறேன்” என்று சொன்னான்.வானரப் படை சிதறியது2

கும்பகர்ணனைப் பார்த்து, சிரித்துக் கொண்டே ராவணன் பேசலுற்றான், இந்த மஹோதரனுக்கு ராமனை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. அதில் சந்தேகமில்லை. அதனால் தான் அவன் யுத்தத்தைத் தவிர்க்க நினைக்கிறான்.

ஆருயிர் சகோதரனே! கும்பகர்ணா! யுத்த சாத்திரத்தை நன்கு அறிந்தவனே! அன்பு காட்டுவதில் உனக்கு நிகரானவன் எவனுமில்லை. எதிரியை அழித்து வெற்றிக் கொடியை நாட்டுவதற்குப் புறப் படுவாயாக! கையிலே சூலம் ஏந்தி, காலனே வந்து விட்டது போல் யுத்த களத்தில் நுழைவாயாக!சூரியனை நிகர்த்த அந்த இரண்டு அரச குமாரர்களையும், அவர்களுடைய படையினரையும் விழுங்குவாயாக! உன் உருவத்தை ப் பார்த்தவுடனேயே வானரர்கள் பறந்தோடப்போகிறார்கள்.

ராம- லக்ஷ்மணர்களின் இருதயங்கள் பிளக்கப்போகின்றன. வெற்றி உன்னுடையது தான்!

தன்னுடன் பேசியதால் பெரும் ஊக்கம் எய்திய ராவணனைப் பார்த்து, கும்பகர்ணன் ”நான் தனியாகவே செல்ல விரும்புகிறேன்” எனது படை இங்கேயே இருக்கட்டும், என்று கூறி விட்டு , மிகவும் சக்தி வாய்ந்த ஓர் அம்பைக் கையில் எடுத்தான்.

ராவணன், கதைகளையும் வேல்களையும் தாங்கிய படையினரோடு நீ செல்வது தான் நல்லது. வானரர்கள் பலம் மிக்கவர்கள் மட்டுமல்ல. பெரும் மன உறுதி படைத்தவர்களாகவும், இருக்கிறார்கள்.

ஆகையால் படை சூழ நீ செல்வது தான் நல்லது” என்று சொல்லி விட்டு, கும்ப கர்ணனின் கழுத்தில் ஒரு தங்க நகையை அணிவித்தான். அவனது கைகளில் ஆபரணங்களைப் பூட்டினான். அவனுக்கு மாலைகளைச் சூட்டினான். இப்படி அலங்கரிக்கப் பட்ட கும்ப கர்ணன் நெய் வார்க்கப் பட்டு, கொழுந்து விட்டு எரிகிற வேள்வித் தீ போல் காட்சியளித்தான்.

எந்த வித தாக்குதலையும் தாங்கக் கூடிய கவசம் அவனால் அணியப் பட்டது. கையில் சூலமேந்தி நின்ற பேருருவம் படைத்த கும்பகர்ணன், அப்போது மூன்று காலடிகளால் உலகை அளக்க தீர்மானம் செய்து விட்ட உத்தமனாகிய நாராயணனைப் போல்தோற்றம் அளித்தான்.

ராவணனை வணங்கி வலம் வந்து கும்பகர்ணன் புறப் பட, ஆசீர்வாத மந்திரங்கள் முழங்கப் பட்டன. சங்குகள் ஒலித்தன. முரசொலி எழுந்தது.சிறந்த ஆயுதங்களைத் தாங்கிய வீரர்கள்தேர்களிலும், யானை, குதிரைகள் மீதும் அமர்ந்து அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

தேவர்களும் கண்டு நடுங்கும் கும்பகர்ணன் இவ்வாறாக யுத்தத்திற்குப் புறப் பட்டான். அரக்கர்கள் பே ரொலி எழுப்பினார்கள். கடலையும் கலக்கக் கூடிய அந்த சப்தம் நான்கு திசைகளையும் எட்டியது.

இப்படி அவன் யுத்த களத்திற்குப் புறப் பட்ட போது, மேகங்கள் தங்கள் நிறத்தை இழந்தன. நக்ஷத்திரங்கள் வீழ்ந்தன. மின்னல்கள் தோன்றின. நிலம் நடுங்கியது. நரிகள் ஊளையிட்டன. பறவைகள் இடப்புறம் நோக்கிப் பறந்தன.

கும்பகர்ணனின் இடது கண் மற்றும் இடது கை ஆகியவை துடித்தன. ஒரு வால் நக்ஷத்திரம் விழுந்தது. சூரியன் தனது ஒளியை இழந்தான். ஒரு கழுகு கும்பகர்ணனின் சூலத்தின் மீது வந்து அமர்ந்தது. மயிர்க் கூச்செறியும் வகையில் தோன்றிய இந்த அபசகுனங்களையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல், அறிவாளியாகிய கும்பகர்ணன் முன்னேறினான்.

யுத்த களத்தில் போருக்குத் தயாராக நின்ற வானர்கள், கும்பகர்ணனைப் பார்த்தனர். பெரும் அச்சம் அவர்களைக் கவ்விக் கொள்ள, புயற் காற்றினால் தூக்கி எறியப் பட்டவர்கள்போல, நான்கு திசைகளிலும் அவர்கள் சிதறினார்கள். இதைக் கண்ட கும்பகர்ணன் இடியோசை போல கர்ஜித்தான்.

வானரப் படை சிதறியது2

அதைக்கேட்ட வானரர்கள் பயத்தினாலேயே, சாய்க்கப் பட்ட மரங்கள்போல் தரையில் வீழ்ந்தனர். உலக அிவிற்கான நேரத்தில் தோற்றமளிக்கக் கூடிய கால ருத்ரன்போல், காட்சியளித்துக் கொண்டு கும்ப கர்ணன்மேலும் விரைவாக முன்னேறினான்.

இவ்வாறு அவன் முன்னேறிய போது கடல் கொந்தளித்தது. மலைகள் நடுங்கின. இந்திரனாலும், எமனாலும் வருணனாலும் வெல்லப் பட முடியாதவனாகத் திகழ்ந்த கும்பகர்ணன்.

தனது பார்வையிலேயே நெருப்பைக் கக்கிக் கொண்டு, முன்னேறிய போது, வானரர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடவே, நெரிசலின் விளைவாக அவர்களிடையே மேலும் நாசம் விளைந்தது.

இதைப் பார்த்த, அங்கதன் பெரிதும் கவலை கொண்டதன். கவாக்ஷன், நளன், நீலன், குமுதன் போன்ற வானரர் தலைவர்களைப் பார்த்து, உங்களுடைய திறமைகளை நினைத்துப் பார்க்காமல் ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? பயந்தது போதும்.

அப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா? அந்த அரக்கர்களை நாம் அழிப்போம். யுத்த களத்திற்குத் திரும்பிவாருங்கள்” என்று கூவி அழைத்தான். வானரர்கள் திரும்பத் தொடங்கினர்.

……………………………………………………………………..

..

தொடரும்… 🌸

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here