ஆதிவம்சாவதரணப் பர்வம்

மஹாபாரதம் கிருஷ்ணர் தூது புறப்பட்டார்.

கிருஷ்ணர் தூது புறப் பட்டார்.

பேசுகிறது-சோ
……………………………..
உத்யோக பர்வம்
…………………..

கிருஷ்ணர் தூது புறப் பட்டார்.
……………………………………………..

சொல்ல வேண்டியதையெல்லாம் தர்மபுத்திரரே சொல்லி விட்டார் என்றாலும், நானும் என பீடிகையுடன் அர்ஜுனன், கிருஷ்ணரிடம் தனது கருத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

திருதராஷ்டிரருக்கு ஏற்பட்டுள்ள பேராசை காரணமாகவோ, அல்லது எங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் காரணமாகவோ இவ்விஷயத்தில் சமாதானம் தேவையில்லை என்று நீர் நினைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நீர் நினைத்தால் கௌரவர்களுக்குக் கெடுதல் செய்யாமலே எங்களுக்கு நன்மையைச் செய்ய முடியும்.

அது உங்களால் இயலாத காரியமல்ல. எங்களுக்கு நியாயம் கிட்டும் வகையில் உங்கள் பிரயாணம் அமைய வேண்டும். அதே சமயத்தில் கௌரவர்களுக்கு எந்தத் தீங்கும் வராத வழியை நீங்கள் கைக் கொள்வது முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் சமாதானம் ஏற்பட்டாலும் சரி, அல்லது சண்டை ஏற்பட்டாம் சரி அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். எங்களிடமுள்ள அன்பின் காரணமாகவே நீங்கள் இப்போது பயணத்தைத் தொடங்கப் போகிறீர்கள்.

கௌரவர்களுடைய நாசம் தான் சிறந்த தீர்வு என்று உங்களுக்குத்தோன்றினால், அதற்கான வழி முறையையே நீங்கள் கைக் கொள்ளுங்கள். எங்களுக்கு எது நன்மை பயக்குமோ, அதை நீங்கள் செய்யுங்கள். நீங்கள் செய்வது நல்லதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் பதில் கூறினார். சமாதானம் போர், – என்ற இரண்டு வழி முறைகளிலும் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து நான் செயல் படுகிறேன். ஒரு நிலம் நன்றாகச் சீர்திருத்தப் பட்டு, நல்ல முறையில் உழப் பட்டிருந்தாலும் கூட, மழை இல்லை என்றால் அதில் எதுவும் விளையப் போவதில்லை.

கிருஷ்ணர் தூது புறப்பட்டார்.

மஹாபாரதம் கிருஷ்ணர் தூது புறப்பட்டார்.

அங்கே மனித முயற்சி பலனளிப்பதில்லை. ஆனால் நல்ல மழை இருந்தும் கூட ஒரு நிலம் உழப் படவில்லை என்றாலோ, நன்றாகக் கவனிக்கப் படவில்லை என்றாலோ அங்கும் பலன் விளைவதில்லை.

ஆகையால், உலகத்தில் சாதனை என்பது மனித முயற்சி, தெய்வ அருள், இரண்டையும் பொறுத்திருக்கிறது. இப்பொழுது நான் என்னால் இயன்ற அளவில் முயற்சி செய்கிறேன். தெய்வத்தின் எண்ணம் எப்படி இருக்கிறது என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது.

துரியோதனன் சமாதானத்திற்குச் சம்மதம் தெரிவிப்பான் என்று நான் நினைக்கவில்லை. அவன் அழிந்தால் தான் உங்களுக்குரிய ராஜ்யம் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். துரியோதனன், தர்ம புத்திரரின் வார்த்தைகளைக்கேட்கப் போவதில்லை.

அப்படி அவற்றை நிறைவேற்றஅவன் முன் வராவிட்டால், போரில் அவனைக் கொல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இருப்பதாக நான் நினைக்கவில்லை. இரு தரப்பிலும் போருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப் பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சமாதானம் ஏற்படக் கூடும் என்று நீங்கள் எல்லாம் நினைப்பது எனக்கு விந்தையாகத் தான் இருக்கிறது. துரியோதனாதிகளுடன் சமாதானம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை.

கிருஷ்ணர் தூது புறப்பட்டார்.

ஹாபாரதம் கிருஷ்ணர் தூது புறப்பட்டார்.

அதை விரும்பவுமில்லை
என்று நீ அவர்களை அழிப்பதாக அந்தச் சபையில் சபதமிட்டாமோ, அன்றே அவர்கள் அழிந்தாயிற்று, என்று தான் நான் கருதுகிறேன்.

கிருஷ்ணர், இவ்வாறு பேசிய பிறகும் கூட, நகுலன், சமாதானத்தை வெறுக்காமல், அதற்கான வழி முறைகளையே நாட வேண்டும் என்று வலியுறுத்தினான் அவன் சொன்னான், எங்கள் அபிப் பிராயத்தைக் கேட்பதற்கு முன்பாக, எங்களுடைய பகைவர்களின் அபிப் பிராயத்தை நீங்கள் கேட்டு அறிந்து கொள்வது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாம் ஒரு விதமாகத் தீர்மானம் செய்கிற விஷயம், வேறு விதமாக முடிந்து விடுகிறது. ஆகையால், காலத்தின் போக்கையும், மற்றவர்களின் மனப் பக்குவத்தையும் அறிந்து நாம் செயல்பட வேண்டும்.

மனிதர்களின் மனம் நிலையற்றதாகவே இருக்கிறது. எங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் காட்டில் வசித்த போது, ராஜ்யம் ஆள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு வர வில்லை.

அந்த ஆசையே இருக்கவில்லை. இப்பொழுதோ அந்த ஆசை எங்களுக்குப் பெரிதாக வந்து விட்டது. நாங்கள் காட்டிலிருந்த போது கவனிக்காமல் இருந்தவர்கள் கூட, இப்பொழுது தங்களுடைய படைகளுடன் எங்களோடு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது, மனித மனம் எப்படியெல்லாம் மாறுகிறது. என்பதை நாம் உணர்கிறோம். துரியோதனனுக்கு எந்த விதமான மன வருத்தத்தையும் ஏற்படுத்தாமல், இனிமையான வார்த்தைகளையே அவனிடம் சொல்லுங்கள்.

கிருஷ்ணர் தூது புறப்பட்டார்.

மஹாபாரதம் கிருஷ்ணர் தூது புறப்பட்டார்.

அதற்கு அவன் மசியாமற் போனால், நமது பலத்தைக் கூறி, அவனை அச்சுறுத்துங்கள். பீஷ்மர் துரோணர் போன்றவர்கள் அந்தச் சபையில் துரியோதனனுக்கு நல்ல புத்தி கூறுவார்கள். ஆகையால் சமாதானத்திற்கு முயற்சி செய்யுங்கள்.

நகுலன் இப்படிக் கூறியதை சகதேவன் ஏற்கவில்லை. தப்பித் தவறி துரியோதனாதிகள் சமாதான வழியை ஏற்க இசைந்தாலும் கூட, நீர் அதற்கு ஒப்புக் கொள்ளக் கூடாது. யுத்தம் தான் நடக்க வேண்டும்.

அவர்களுடைய சபையில் திரௌபதி பட்ட பாட்டை என்னால் மறக்க முடியாது. எங்கள் ஐவரில் மற்ற நால்வரும் தர்மத்தின் பாதையை அனுசரித்தாலும் கூட, நான் தர்மத்தை விட்டு விட்டாவது போரில் அவர்களைக் கொல்லத் துடிக்கிறேன். ஒன்று- நாங்கள் முன்பு போல் காட்டிலேயே வாழ வேண்டும்.

அல்லது – ஹஸ்தினாபுரத்தில் இருந்து கொண்டு ஆட்சி புரிய வேண்டும். இதைத் தவிர, மூன்றாவது வழி ஒன்றிருப்பதாக நான் அறியவில்லை. இதுவே என் கருத்து.
இதையடுத்து சாத்யகி முதலானோர் சகதேவன் கருத்தையே ஆதரித்துப் பேசினார்கள். வீரர்கள் அனைவரும் போர் முழக்கம் செய்தார்கள். அதன் பிறகு திரௌபதி அழுது கொண்டே பேசினாள்.

ராஜ்யத்தில் பங்கு தராமலே சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று துரியோதனன் முனைந்தால், அந்தச் சமாதானம் நமக்கு வேண்டவே வேண்டாம். நல்ல வார்த்தைகளால் துரியோதனாதிகளிடம் எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

ஆகையால் அவர்கள் விஷயத்தில் நீங்கள் தயவு காட்டவே கூடாது. யுத்த களத்தில் துரியோதனாதிகளுக்கு நல்ல பாடம் கற்பித்தால் தான் பாண்டவர்களுக்கு நன்மை உண்டாகும். உங்களுக்கும் புகழ் உண்டாகும். க்ஷத்ரியர்கள் அனைவருக்கும் நற்கதியும் கிட்டும.

கொல்லத் தகாதவனைக் கொன்று விட்டால் என்ன பாவம் உண்டாகுமோ, அதே பாவம் கொல்ல வேண்டியவனைக் கொல்லாமல் விட்டால் உண்டாகும் என்று பண்டிதர்கள் கூறுகின்றனர்.

கிருஷ்ணர் தூது புறப்பட்டார்.

நீங்கள் உயிரோடு இருக்கும் போது, பாண்டவர்கள் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, பலர் நிறைந்த சபையில், என் கூந்தலைப் பிடித்து இழுத்து, பெரும் துன்பத்தை எனக்கு அவர்கள் உண்டாக்கிய நிகழ்ச்சியை நீங்கள் யாரும் மறந்து விடக் கூடாது.

அந்தப் பாவிகளின் சபையில் நான் அடிமையாக நடத்தப் பட்டேன். அர்ஜுனனுடைய புகழ் பெற்ற வில், பீமனுடைய மகிமை பொருந்திய பலம், இவையெல்லாம் இருந்தும் கூட எனக்கு அந்த நிலை ஏற்பட்டது . இந்தக் கொடுமையை நிகழ்த்திய துரியோதனன் இன்னும் உயிருடன் வாழ்கிறான்.

அவன் அப்படி வாழ்வதால், பீமனுடைய பலமும் அர்ஜுனனுடைய வில்லும் இகழத் தக்கவையாகி விட்டன என்பது என் கருத்து.

ஆகையால் நீராவது உம்முடைய கோபத்தைத் துரியோதனன் பேரில் செலுத்த வேண்டும். என்னைப் பிடித்து இழுத்த துச்சாசனனின் கைகள் அறுபட்டு, யுத்த களத்தில் வீழ்ந்து கிடப்பதைப் பார்க்காவிட்டால் எனக்கு நிம்மதி என்பது கிடையாது.

கோபம் எனும் தீயை மனதில் வளர்த்துக் கொண்டே, நான் பன்னிரண்டுஆண்டுகள் காட்டிலும், ஒரு வருடம் தலை மறைவாகவும் வாழ்ந்து கழித்து விட்டேன். இப்போது தர்ம புத்திரர் மட்டுமல்லாமல், பீமசேனரும் கூட சமாதானத்தை விரும்பிப்பேசுவது என் நெஞ்சைக் குத்துகிறது.

கிருஷ்ணர், திரௌபதியைத்தேற்றி சில வார்த்தைகள் சொன்னார். வெகு விரைவில் கௌரவ குலப் பெண்கள் அனைவரும் அலங்கோலமாக அழுவதை நீ பார்க்கப்போகிறாய்.

அவர்களுடைய உறவினர்கள் எல்லோரும் அழியப் போகிறார்கள். உனக்குத் துன்பத்தை விளைவித்தவர்கள், நாசமடையப்போகிறார்கள். காலத்தின் கோலத்திற்கு உட்பட்டு, துரியோதனன் என்னுடைய வார்த்தையைக் கேட்காமல் போனால், அவர்கள் தரப்புக்கு பெரும் நாசம் ஏற்படப்போகிறது. ஒன்று சொல்கிறேன்.

இமயமலை சற்று அசைந்து கொடுக்கலாம். பூமி நூறு துண்டுகளாக ச் சிதறலாம். நட்சத்திரங்களோடு இணைந்து ஆகாயம் கீழே விழுந்து விடலாம். கடல் நீரற்று வற்றிப்போகலாம். ஆனால் என்னை நம்பியவருக்கு நான் அளிக்கும் வாக்கு என்றும் வீண் போகாது.ஆகையால் உன் கண்ணீரைத் துடைத்துக் கொள்.

மகிழ்ச்சியோடு இரு. பாண்டவர்கள் தங்கள் பகைவர்களை வென்று, அவர்களைப்போர்க்களத்தில் கொன்று, ராஜ்யத்தை ஆளப் போகிறார்கள், அதை நீ காணத்தான் போகிறாய்.

இவ்வளவு நடந்த பிறகும் கூட அர்ஜுனன், நீங்கள் கௌரவர்களுக்கும் நண்பர். இரு தரப்பினருக்கும் நீங்கள் உறவினர். பாண்டவர்களான நாங்களும் கௌரவர்களுடைய நாசத்தை விரும்புவது நல்லதல்ல.

கிருஷ்ணர் தூது புறப்பட்டார்.

ஆகையால் எப்படியாவது சமாதானத்தைப் பெறவே நீங்கள் முயற்சிக்க வேண்டும். அப்படி நீங்கள் முயற்சி செய்தும், நல்ல வார்த்தைகளைப் பேசியும் துரியோதனன் சமாதானத்தை ஏற்கவில்லை என்றால், அவன் அழியட்டும்” என்று கூறினான்.

கிருஷ்ணர் தூது புறப் பட்டார். அப்போது பனிக் காலம் தொடங்கி இருந்தது. பயிர்கள் செழித்து க் கொண்டிருந்தன. கார்த்திகை மாதத்தில் ரேவதி நட்சத்திரத்தையுடைய நன்னாள் அது. சூரியன் உதித்து, மைத்ரம் என்ற மூகூர்த்தமும் கூடியிருந்த நாள் அது.

இப்படிப் பட்ட நல்ல தினத்தில் தனது காலைக் கடன்களை முடித்து விட்டு, சூரியனையும் அக்னி தேவனையும் கிருஷ்ணர் துதித்தார். காளை மாட்டின் பின் பக்கத்தைத் தொட்டார். பிராமணர்களை வணங்கினார். அக்னியை வலம் வந்தார். பிறகு புறப்பட ஆயத்தம் செய்தார்.

என்னுடைய ஆயுதங்களை எடுத்து என்னுடைய தேரில் வையுங்கள். துரியோதனன் , கர்ணன், சகுனி ஆகியோர் நல்லவர்கள் அல்ல. ஆகையால் அங்கு எதுவும் அசம்பாவிதம் நடக்காது என்று அலட்சியமாக நினைக்க நான் தயாராக இல்லை” என்று கூறினார்.

சாத்யகி, கிருஷ்ணருடைய ஆயுதங்களை அந்தத் தேரில் வைத்தான். தேர் புறப் பட்டது. அவருடன் சாத்யகியும் சென்றான். தேர் புறப் பட இருக்கையில், தர்ம புத்திரர் கிருஷ்ணரை அணுகி, ஹஸ்தினா புரத்தில் வாழும் தங்கள் தாயார் குந்தி தேவியிடம், தங்களுடைய பணிவான வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னார்.

பீஷ்மர், துரோணர் போன்றவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அவரவர் களுடைய வயது, அவர்கள் வசிக்கும் பதவி, ஆகியவற்றைப் பொறுத்து, எம்மாதிரி மரியாதை செய்ய வேண்டுமோ, அதையும் செய்யச் சொன்னார்.

அர்ஜுனன், கிருஷ்ணரை அணுகி மீண்டும் ஒரு முறை சமாதானம் ஏற்பட வாய்ப்பே இல்லாவிட்டால் தான் யுத்தம்” என்று வற்புறுத்தினான். பல படை வீரர்களும், குதிரை வீரர்களும் பின் தொடர கிருஷ்ணர் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப் பட்டார்.

கிருஷ்ணரின் வருகையைப் பற்றி அறிந்த திருதராஷ்டிர மன்னன், அவரை வரவேற்கப் பல விமரிசையான ஏற்பாடுகளைச் செய்ய ஆணையிட்டான். துரியோதனனை நோக்கி அவன் சொன்னான், பாண்டவர்களுக்காக வாதாடுவதற்கு கிருஷ்ணர் வரப் போகிறார்.

அவர் பூஜிக்கத் தகுந்தவர்.ஆகையால் அவருக்கு நல்ல மரியாதை செய்ய வேண்டும். அவருக்கு மரியாதை செய்து பூஜித்தால், நமக்கு நன்மை கிட்டும். இல்லையென்றால் துக்கத்தைத் தான் அனுபவிக்க நேரிடும்.

அவரை நமது உபசாரங்களால் சந்தோஷப் படுத்தினால் அவரிடமிருந்து நாம் நன்மைகளைப் பெற முடியும். ஆகையால் அவரைப் பூஜிப்பதற்கும் வரவேற்பதற்கும் நல்ல ஏற்பாடுகளைச் செய்“ என்று கூறினான். துரியோதனனும் அந்தக் காரியத்தில் முனைந்தான்.

இதைக் கண்டு பீஷ்மர் முதலியவர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தார்கள். அதன் பிறகு விதுரரை அழைத்து திருதராஷ்டிரன், தான் செய்துள்ள ஏற்பாடுகளைப் பற்றி விதுரனுக்கு எடுத்துச் சொன்னான். மிக விலையுயர்ந்த ரத்தினங்களையும், ஆபரணங்களையும் , மற்ற பல பொருட்களையும் கிருஷ்ணருக்குப் பரிசாக அளித்து, அவரை மகிழ்விக்கப் போவதாகவும் திருதராஷ்டிரன் கூறினான்.

விதுரர் கடுமையாகப்பேச ஆரம்பித்தார். அரசே! இம்மாதிரி மரியாதைக்கெல்லாம் உகந்தவர் தான் கிருஷ்ணர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் இதை மனதாரச் செய்வதாக நான் கருத வில்லை.

என் மார்பின் மீது கை வைத்து , என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நான் சொல்கிறேன்- நீங்கள் செய்யும் உபசாரம் எல்லாம், உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காகவே ஐந்து கிராமங்கள் கொடுத்தாலுமு் போதும்என்று கூறிய பாண்டவர்களுக்கு, அதையும் கொடுக்க நீர் விரும்பவில்லை.

ஆனால் பொருள் கொடுத்து, பரிசுகள் கொடுத்து, மரியாதைகளைச் செய்து, கிருஷ்ணரை உங்கள் தரப்புக்கு விலைக்கு வாங்கி விடலாம். என்று நினைக்கிறீர்கள். இந்த மாதிரி செய்தால் கிருஷ்ணரை, பாண்டவர்களிடமிருந்து பிரித்து விட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.

கிருஷ்ணரின் பெருமையை நான் அறிவேன். மனதாரச் செய்யும் சிறிய பணிவிடையும் அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால் மனதில்லாமல் செய்யும் மிகப் பெரிய செயல்களும், அவருக்குத் திருப்தியைத் தராது. உண்மையிலேயே நீர் கிருஷ்ணரிடம் மரியாதை தெரிவிக்க விரும்பினால், அவருடைய தூது சமாதானத்தில் முடியுமாறு செய்து கொடுங்கள்.

அதைத் தவிர நீர் செய்வதற்கு எதுவுமில்லை. அதை விட்டு, தந்திரமான வழி முறைகளைக் கையாள்வதால் உங்களுக்கோ, உங்கள் குலத்திற்கோ எந்த நன்மையும் விளையப் போவதில்லை.

இதைக்கேட்ட துரியோதனன் சொன்னான். தந்தையே கிருஷ்ணரைப் பற்றி விதுரர் கூறியது உண்மையே. அவரைப் பாண்டவர்களிடமிருந்து பிரிக்க முடியாது. நமது தரப்பிற்கு அவர் வரப் போவது இல்லை. இந்த நிலையில் நாம் எதற்காக வீணாக அவரைக் கௌரவிக்க வேண்டும்.

இப்போது நாம் அவரை கௌரவித்தால், பயத்தால் நாம் அம்மாதிரி நடந்து கொள்வதாக அவர் நினைப்பார். அதுவுமன்றி இப்படி குனிந்து செயல்படுவது க்ஷத்ரியனுக்குரிய லட்சணம் அல்ல.

கிருஷ்ணரை் மதிக்கத் தகுந்தவரே என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் இப்போது அவர் விருப்பத்தை நிறைவேற்ற நம்மால் முடியாது. ஆகையால் இந்த மரியாதைகளை அவருக்கு நாம் செய்யத் தேவையில்லை என்றே நானும் நினைக்கிறேன்.

துரியோதனன் இப்படிப்பேசியதைக்கேட்ட பீஷ்மர், திருதராஷ்டிரனுக்குச் சமாதானத்தின் மேன்மையை மீண்டும் எடுத்துரைத்தார். அப்போது துரியோதனன் பீஷ்மரைப் பார்த்து, என் உயிருள்ள வரையில் பாண்டவர்களோடு சேர்ந்து இந்த ராஜ்யத்தை நான் அனுபவிக்கப் போவதில்லை.

கிருஷ்ணர் இங்கு தூது வருகிறபோது, நான் ஒரு காரியம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன். கிருஷ்ணனை இந்தச் சபையிலேயே நான் கட்டிப்போட்டு விடப் போகிறேன்.அதன் பிறகு, அவர் என் வசம் ஆவார்.

இதை எப்படிச் சாதிப்பது என்பதற்கு நீங்கள் கூட எனக்கு உபாயம் சொல்லித் தரலாம்.ஆனால் இந்த உபாயத்தை கிருஷ்ணன் அறிந்து கொண்டு விடக் கூடாது. யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் யுத்தத்தைத் தவிர்த்து, நாம் ராஜ்யத்தை ஆள்வதற்குக் கிருஷ்ணனை இங்கேயே கட்டிப்போட்டு சிறைப் பிடித்து விடுவது தான் சரியான வழி” என்று தன் எண்ணத்தை வெளிப் படுத்தினான்.

அப்போது திருதராஷ்டிரன், துரியோதனனிடம் இந்த மாதிரி தீய எண்ணத்தை விட்டு விடும் படி , கேட்டுக் கொண்டான். பீஷ்மர், இந்த துரியோதனன் மிகவும் கெட்ட எண்ணம் உடையவன். இவன் செல்லும் பாதை அழிவைத்தான் தேடித்தரும் பாவிகளின் சேர்க்கையால் இவன் மேலும் கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறான்.

நல்லவர்களின் வார்த்தையை இவன் கேட்கப் போவதில்லை. இவனுடைய பேச்சை நான் கேட்க விரும்பவில்லை” என்று கூறிச் சபையை விட்டு வெளியேறினார்.

ஹஸ்தினா புரத்தில் திருதராஷ்டிரன் சபையில் இப்படி நடந்து கொண்டிருந்த போது, அங்கு தூது வந்த கிருஷ்ணர், திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்தார். அவருக்கு மரியாதைகள் செய்யப் பட்டன.

அதன் பிறகு திருதராஷ்டிரனின் அனுமதி பெற்று கிருஷ்ணர், சபையிலிருந்து வெளியேறி, குந்தியைச் சந்திக்கச் சென்றார். தன் மகன்களின் நிலையை நினைத்து வருந்திய குந்திக்கு அவர் ஆறுதல் சொன்னார்.

அதன் பின்னர் துரியோதனன் , கிருஷ்ணரை விருந்துக்கு அழைத்தான். தூது வந்தவன் தூது வந்த இடத்தில் விருந்து சாபப்பிடக் கூடாது” என்று கூறி துரியோதனன் அளித்த விருந்தை ஏற்க மறுத்த கிருஷ்ணர், அதற்கு வேறொரு காரணத்தையும் சொன்னார். நீ பாண்டவரைப் பகைப்பதால் என்னையும் பகைத்தவனாகிறாய்.

பகைவரின் உணவை உண்ணக் கூடாது. இந்தக் காரணத்தைக் கொண்டும் நீ தரும் உணவை என்னால் ஏற்க முடியாது. விதுரர் வீட்டிற்குச் சென்று அவர் தரும் உணவையே ஏற்க விரும்புகிறேன்” என்று கூறி அவர் விதுரரின் வீட்டிற்குச் சென்றார்.

அங்கே அவர் உணவு அருந்தியப் பிறகு, கௌரவர்கள் மத்தியில் நிலவும் கருத்துக்கள் பற்றி விதுரர் அவரிடம் கூற ஆரம்பித்தார்.
( இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டத்கிறதுதோன்று.

யுத்தம் வந்து தான் தீர வேண்டும் என்று துரியோதனன் எவ்வளவு விரும்பினானோ, அந்த அளவுக்குக் கிருஷ்ணரும் விரும்பினார் என்றே தெரிகிறது. பாண்டவர்கள் யுத்தத்தில் ஜெயிப்பதற்கு மிகவும் நம்பியது, பீமனையும், அர்ஜுனனையும் தான்.

ஆனால் அவர்கள் இருவர் கூட யுத்தத்தை விட சமாதானமே சிறந்தது என்று நினைத்தார்கள். தர்ம புத்திரர் ஓரளவு குழப்பமடைந்தாலும், யுத்தத்தை விட சமாதானத்தையே அவரும் அதிகம் விரும்பினார். நகுலனும், அவ்வாறே நினைத்தான். சகதேவன் ஒருவன் தான் கிருஷ்ணரைப்போலவே, யுத்தமே சிறந்த வழி” என்று கூறினான். திரௌபதியும் அவ்வாறே சொன்னாள்.

ஆக கிருஷ்ணரைத் தவிர யுத்தம் நிச்சயமாக வேண்டும் என்று பாண்டவர்கள் தரப்பில் விரும்பியது திரௌபதியும், சகதேவனும் தான். கிருஷ்ணர் விரும்பியிருந்தால் யுத்தத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஒரு வாதத்தை, யுத்தம் முடிந்த பிறகு பலராமர் கூட சொல்கிறார்.

ஆனால் கிருஷ்ணர் அவதாரம் செய்த காரியமோ, பூமியின் பாரத்தைக் குறைப்பது. அதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இரு தரப்பிலும் யுத்த முஸ்தீபுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போதுதான்- படைகள் குவிக்கப் பட்டுக் கொண்டிருந்த போது தான். சமாதான முயற்சிகளும் நடந்தன.

ஆகையால் அது ஒரு சடங்குக்காகச் செய்யப் பட்ட காரியமாகத் தெரிகிறதே தவிர, இரு தரப்பினரும் யுத்தம் என்று முடிவு செய்து விட்டதாகவே தோன்றுகிறது. பாண்டவர் தரப்பில் பீமன், அர்ஜுனன், நகுலன் ஆகியோருக்கும் , பெருமளவு தர்ம புத்திரருக்கும், சமாதானத்தின் மீதே பற்று இருந்தாலும் கூட, கிருஷ்ணர் அவர்களை முன் நின்று நிறுத்தி யுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்களிடம் தோற்றுவித்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணர் செய்தது சரியா தவறா என்பது பற்றி ஆராயும் தகுதி எனக்கில்லை. ஆனால், துரியோதனன் மட்டும் தான் யுத்தத்திற்குக் காரணம் என்று நினைப்பது சரியாக இருக்காது. கிருஷ்ணரும் கூட, அதற்கு ஒரு முக்கியமான காரணம் தான்.

அவர் முக்காலும் அறிந்தவர் என்பதால் இந்த யுத்தம் நடந்து தான் தீரும் என்றும், சமாதானம் ஏற்படாது என்றும் அவருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கலாம். அதனாலேயே கூட அவர் பீமன், அர்ஜுனன் போன்றவர்களின் சமாதான வாதங்களை அலட்சியப் படுத்தியிருக்க முடியும்.

இந்தக் குறிப்பை படிக்கிறவர்களின் மனதில் ” இப்படியும் சொல்லி, அப்படியும் சொன்னால் என்ன அர்த்தம்? என்ற கேள்வி எழலாம்.

ஆனால் இந்த மாதிரி இரு தரப்பிலும் நியாய, அநியாயங்கள் இரண்டுமே இருக்கும் சிக்கலான நிலைகள் மஹாபாரதத்தில் நிறையவே இருக்கின்றன. மனித வாழ்க்கையே அப்படிப்பட்டது தான். இரு தரப்புகள் ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்கும்போது, அல்லது இரு மனிதர்கள் ஒருவரையொருவர் எதிர்க்கும் போது, ஒரு பக்கத்தில் தான் எல்லா நியாயங்களும் இருக்கின்றன என்று சொல்லக் கூடிய நிலைமைகள் தோன்றுவது மிகவும் அரிது.

ஒரு பக்கத்தில் நியாயங்கள் அதிகமாக இருக்கலாம். மற்றொரு பக்கத்தில் அநியாயங்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் இரு தரப்பிலுமே நியாய அநியாயங்கள் இருக்கத் தான் செய்யும். இது உலக இயல்பு.

எந்தக் கோணத்திலிருந்து நாம் ஒரு விஷயத்தைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து, நமது தீ்ர்ப்பு அமைகிறது. ஒரு நிகழ்ச்சியை மட்டும் பார்த்தால், நாம் ஒரு தீர்ப்பு வழங்குவோம். அதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளையும் மனதில் வைத்துக் கொண்டு, அந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் நமது தீர்ப்பு வேறு விதமாக அமையும்.

தர்மத்தின் பாதை விசித்திரமானது என்று மஹாபாரதத்தில் அடிக்கடி கூறப் படுகிற தத்துவம், இன்றைய நடை முறைக்கும் மிகவும் ஒத்துவரக் கூடியதே.)
……………………………………………………………………..

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here