பழங்களின் மருத்துவ குணங்கள்

*பழங்களின் மருத்துவ குணங்கள்:-*

🫐🫐🫐🫐🫐🫐🫐🫐🫐🫐🫐
1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்

3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்

5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி

பழங்களின் மருத்துவ குணங்கள்

6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

பழங்களின் மருத்துவ குணங்கள்

7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.

8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.

9. திரட்சை :- 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.

10. மஞ்சள் வழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.

பழங்களின் மருத்துவ குணங்கள்

11. மாம்பழம் :- மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகாpக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

12. கொய்யாப்பழம் :- உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும். சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.பழங்களின் மருத்துவ குணங்கள்

வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம்.

விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பழங்களின் மருத்துவ குணங்கள்

13. பப்பாளி :- மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.பழங்களின் மருத்துவ குணங்கள்

மாதவிடாய் சாpயான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நோpடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

14. செர்ரி திராட்சை :- கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

15. அன்னாசி :- அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அhpய மருந்தாகவும் இருக்கிறது.

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றhக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

16. விளாம்பழம் :- விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பழங்களின் மருத்துவ குணங்கள்

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு.

எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜPரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

பழங்களின் மருத்துவ குணங்கள்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

*_வாழைத்தண்டின் முக்கியமான பயன்கள் !!_*

குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

வாழைத்தண்டின் முக்கியமான பயன்கள்

வாழைத்தண்டின் முக்கியமான பயன்களை பற்றி இங்கு காண்போம்….

வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால், சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

வாழைத்தண்டின் முக்கியமான பயன்கள்

மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும். கல்லீரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்கள் வாழைத்தண்டை சூப் செய்து அருந்தி வந்தால், கல்லீரல் மீதான பாதிப்பு சற்று குறையும்.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

வாழைத்தண்டின் முக்கியமான பயன்கள்

வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.

கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும். உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும்.

வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் நம்முடைய இதயத்தை கெடுக்கும் சோடியத்தின் அளவை குறைத்து, இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

வாழைத்தண்டில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைத்தண்டின் முக்கியமான பயன்கள்

வறட்டு இருமல் உள்ளதா? அது இரவு நேரத்தில் தூக்கத்தை கெடுத்து, தொண்டையை புண்ணாகி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு வாழைத்தண்டில் சாறு எடுத்து குடித்து வந்தால் இருமல் காணாமல் போய்விடும்.

அன்றாட நம் உணவில் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்வதால், நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதை தடுத்து, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து, இரத்தசோகை வராமல் தடுக்கிறது.

 

 

வாழைத்தண்டின் முக்கியமான பயன்கள்

 

🌷🌷

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here