பஞ்ச சம்ஸ்காரம்

ஸ்ரீமதே_ராமானுஜாய_நம

யார்_சரணாகதி_செய்யலாம்

பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொள்வதில் நிறைய பேருக்கு முதலில் வருகின்ற சந்தேகம்.
பிராமணர் அல்லாதார் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொள்ளலாமா? என்பது தான்.
பஞ்ச சம்ஸ்காரத்தின் மூலமாக நமது ஆத்மாவையே எம்பெருமானிடம் சரணமடைய வைக்கின்றோம்.
நமது உடலை அல்ல,

ஹரி ஓம் ஷம்பே சிவ ஷம்பே மஹாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்

நமது ஆத்மா எம்பெருமானின் சொத்து .
அதை நம் மனதில் எப்பொழுதும் நிலை நிறுத்திக் கொள்ளவே,
அவனின் சின்னங்களான சங்கு சக்கர முத்திரைகளை நிரந்தரமாக தோளில் பொறித்துக் கொள்கின்றோம்.

ஜாதிகள் உடல் ரீதியானவை.
ஆத்மாவுக்கு ஜாதிகள் இல்லை.

எந்த ஜாதியினரும் உயர்ந்த பாகவதனாக முடியும்.

அதை பிள்ளை லோகாச்சார்யார் தனது ஸ்ரீவசந பூஷணத்தில் மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

ஸ்ரீவசந பூஷணம்
பிறவியால் தாழ்வில்லை

சூர்ணை : 228
க்ஷத்திரியனான விச்வாமித்திரன் ப்ரும்மரிஷி ஆனான்.

ராஜகுலத்தில் க்ஷத்திரியனாக பிறந்த விஸ்வாமித்திரர் தன்னுடைய தவத்தால்
ப்ரும்ம ரிஷியாக உயர்ந்து காட்டினார்.
அவர் அருளிய காயத்ரியை சொல்லாதவர் பிராமணராக ஆகமாட்டார்.
ஆகவே எந்த ஜாதியினரும் பாகவதனாக ஆகலாம்.

சூர்ணை : 229
ஸ்ரீவிபீஷணனை ராவணன் குலபாம்ஸனன் என்றான், பெருமாள் இக்ஷ்வாகு வம்ஸ்யராக நினைத்து வார்த்தையருளிச் செய்தார்.

ஸ்ரீவிபீஷணனை ராவணன் “குலத்தை நாசம் செய்ய வந்தவனே!” என்று திட்டினான்.
ஆனால் ஸ்ரீராமச்சந்திரப்பிரபு “நீ என் கூடப்பிறந்த சகோதரன்” என்று கூறி,
ஸ்ரீவிபீஷணனை இக்ஷ்வாகு குலத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்.

பகவானை சரணாகதி செய்ததால் விபீஷணன் உயர்ந்த குலத்து பாகவதனாக ஆனான்.
சூர்ணை : 230
பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்மமேத ஸமஸ்காரம் பண்ணியிருளினார்.

சீதையை மீட்க போராடி ராவணனால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் ஜடாயு.
பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு,
சிறந்த பாகவதனாக உயிர் நீத்த ஜடாயுவை தன்னுடைய தந்தையாக நினைத்து,
புத்திரன் ஸ்தானத்தில் இருந்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே இறுதிக் கடன்களை செய்து வைத்தார்.

இதனால் சிறந்த பாகவதராக இருந்து இறப்பவர்களுக்கு, நாம் புத்திரன் போல இருந்து இறுதிக்கடன்களை செய்யலாம் என்பது தெரிகின்றது.
இதற்கு பிறவி தடையில்லை.பஞ்ச சம்ஸ்காரம்

பஞ்ச சம்ஸ்காரம்

சூர்ணை : 231
தர்மபுத்ரர் அசரீரி வாக்யத்தையும் ஜ்ஞானாதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீவிதுரரை ப்ருஹ்மமேதத்தாலே ஸம்ஸ்கரித்தார்.

வேலைக்காரிக்கு பிறந்த விதுரர் தாழ்ந்த குலத்தவர் என்று சொல்லப்பட்டாலும்,
தன்னுடைய ஜ்ஞான ஒழுக்கத்தாலே மகாத்மா என போற்றி வணங்கப்பட்டார்.
அவர் இறந்த போது, அவருக்கு ப்ராமணரைப் போல சடங்கு செய்யலாமா என தர்மருக்கு சந்தேகம் எழுந்தபோது,
அசரீரி அப்படியே செய்யச் சொல்லியதால்,
தர்மரும் அப்படியே சடங்குகள் செய்தார்.

சூர்ணை : 232.
ருஷிகள் தர்மவியாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்துக் கொண்டார்கள்.

தர்மவியாதன் கசாப்புத் தொழில் செய்பவன். ஆனால் ஞானத்தில் சிறந்தவன் , ரிஷிகள் இவன் கடை வாசலில் வந்து குழுமி இருந்து,
இவனிடம் ஞான உபதேசம் கேட்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டார்கள்.

சூர்ணை : 233
கிருஷ்ணன், பீஷ்மத்ரோணாதிகள் க்ருஹங்களை விட்டு ஸ்ரீவிதுரர் திருமாளிகையிலே அமுது செய்தான்.

ஸ்ரீகிருஷ்ணன் தூது சென்ற போது,பீஷ்மர் துரோணர் போன்ற உயர்ந்த குலத்தவர்களின் மாளிகைகளில் தங்காமல், ஸ்ரீவிதுரரின் திருமாளிகையிலே தங்கி உணவுண்டார்.

காரணம் விதுரர் சிறந்த பாகவதர்.

சூர்ணை : 234
பெருமான் சபரீ கையினால் உண்டார்.

வேடுவச்சியான சபரீ , தான் உண்டு ருசிபார்த்து கொடுத்த பழங்களை,
ஸ்ரீராமச்சந்திரப் பெருமாள் உண்டார்.
அந்த அளவிற்கு சபரீ சிறந்த பக்தை .

சூர்ணை : 235
மாரநேரி நம்பி விஷயமாகப் பெரியநம்பி உடையவர்க்கு அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.

மாரநேரி நம்பி ஆளவந்தாரின் சீடர். இவர் தாழ்ந்த குலத்தில் பிறந்த வைணவ பாகவதர்.
இவர் பரமபதித்தபோது ஆளவந்தாருடைய மற்றொரு சீடரும்,
ராமானுஜரின் ஆசார்யருமான பெரிய நம்பி, மாரநேரி நம்பியின் வேண்டுகோளுக்கு ஏற்ப பிரும்ம மேத முறையில் மாரநேரி நம்பிக்கு சரமகாரியங்கள் பண்ணினார்.
இது தகாத செயல் என்று எல்லோரும் ராமானுஜரிடம் சென்று முறையிட்டனர்.

அனைத்தும் உணர்ந்த ராமானுஜர்
பெரிய நம்பிகளிடம் “தேவரீர் இப்படி செய்யலாமோ?” என்று கேட்டபோது,

அடியேன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைக் காட்டிலும் பெரியவனுமில்லை,
மாரநேரி நம்பி ஜடாயுவைக் காட்டிலும் தாழ்ந்தவருமில்லை என்று பெரிய நம்பிகள் கூறினார்.
மேலும் ஆள் வைத்து சந்தியாவந்தனம் செய்வரோ என்றார்.

ஊர் மக்கள் பெரிய நம்பியை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த போது,
பெரிய நம்பிகள் செய்தது சரி என்று நம்பெருமாளே கூறினார்.

பஞ்ச சம்ஸ்காரம்

சூர்ணை : 243
ப்ரஹ்மாவாயிழந்து போதல் இடைச்சியாய்ப் பெற்று விடுதல் செய்யும் படியாயிருக்கும்.

ப்ரஹ்மாவாக இருந்து இழந்து போகுதல் அகங்காரத்தினால்,
பகவானுடைய தொப்புள் கொடியில் உள்ள தாமரையில் இருந்தாலும்,
பகவானின் திருவடித் தாமரைகளில் சரணமடைய வேண்டும் என்பதை ப்ரஹ்மா அறிய மாட்டான்.

ஆனால் இடக்கை வலக்கை தெரியாத ஆயர் குலத்தில் பிறந்த சித்தயந்தி என்ற இடைச்சிப் பெண், அகங்காரமில்லாத உண்மை பக்தியால் முக்தி பெற்றாள்.

இவற்றால் எம்பெருமானை சரணமடைந்து முக்தி பெறுவதற்கு பிறக்கும் குலம் முக்கியமில்லை.
அகங்காரம் இல்லாத உண்மை பக்தியே முக்கியம் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆகவே எந்த ஜாதியினரும் பஞ்ச சம்ஸ்காரம் பெறலாம்.
முக்தி அடையலாம்.
எல்லோருக்கும் பரமபதம் கிடைக்கும்,
உயர்ந்த ஜாதியினருக்கு மட்டும் பரமபதம் கிடைக்கும் என்று கூறுபவர்கள்.
ஆச்சார்யர்களின் ஸ்ரீஸுக்திகளை அறியாதவர்கள்.

சித்தயந்தி
~~~~~~~
கோபிகை கன்னியருள் ஒருத்தி,
கண்ணன் குழல் எடுத்து ஊதிய போது ,
குழலிசையில் மயங்கிய சித்தயந்தி கண்ணன் இருக்குமிடத்திற்கு ஓட முயன்றாள், வீட்டுக்காவல் அவளை தடுத்ததால் கண்ணனிடம் போக முடியாத ஏக்கத்தில் தன் உயிரை விட்டுவிட்டாள்.
அதனால் பரமபதம் சென்றாள்.

ஸ்ரீவசந பூஷணத்தில் சரணாகதி

சூத்திரம் 22
ப்ரபத்திக்கு _ தேச நியமமும்,
கால நியமும், ப்ரகார நியமும்,
அதிகார நியமும், பல நியமும் இல்லை

பகவானே கதி என்று அவரின் திருவடிகளில் சரணமடைவதற்கு, இப்படிப்பட்ட இடத்தில்,
இந்தக் காலத்தில் , இப்படிப்பட்டவர், இந்த மாதிரி பலனை அடைவதற்கு, என்று எந்த வரைமுறைகளும் சட்டதிட்டங்களும் இல்லை.
எப்படிப்பட்ட இடத்திலும்,
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்,
யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், எந்த வழியிலும், எந்தப் பலனை அடைவதற்கும் ,
எம்பெருமானை சரணமடையலாம்.

சூத்திரம் 22
விஷய நியமமே உள்ளது.

யாரிடம், எப்படிப்பட்டவரிடம்,
எந்த நிலையில், சரணாகதி என்பதே முக்கியம். இதில் வரைமுறை உள்ளது.

சூத்திரம் 25
கர்மத்திற்கு புண்ய க்ஷேத்திரம் வசந்தாதி காலம் ,
சாஸ்த்ரோக்தங்களான தத்தத் ப்ரகாரங்கள் , த்ரை வர்ணிகர் என்று இவை எல்லாம் வ்யவஸ்திதங்களாயிருக்கும்.

கர்மங்கள் செய்வதற்கு காசி, கயை,
ஸ்ரீரங்கம் போன்ற புண்ணியமான இடங்கள் தேவை.
வசந்த காலம் போன்ற பருவகாலங்கள் முக்கியம்.
சிரார்த்தம் செய்வதற்கு முன்னோர் மரித்த மாதம் திதி பார்க்க வேண்டும்,
திருமணம் போன்ற மங்கல காரியங்களுக்கு நல்ல முகூர்த்தநாள் முகூர்த்தநாள் ஆகியவை தேவை.
விதைப்பதற்கு உழுவதற்கு அறுவடை செய்வதற்கு ஏற்ற காலங்களை தேர்வு செய்ய வேண்டும்.
சாஸ்திரப்படி செய்யும் கர்மங்களுக்கு,
சாஸ்திரப்படியான முறைகளும் தேவை.
இவற்றில் பிராமணர் சத்திரியர் வைசியர் என்று ஜாதியும் பார்க்கப்படும்.
சாஸ்திரப்படி செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப இவை வகுக்கப்பட்டுள்ளது.
(ஆனால் சரணாகதிக்கு இவை எதுவும் தேவை இல்லை)

சூத்திரம் 26
“ஸ ஏஷதேச கால ” என்கையாலே இதற்கு தேசகால நியமம் இல்லை.

விபீஷணன் அகாலத்தில் கடற்கரையிலே ஸ்ரீராமபிரானிடம் சரணமடைந்த போது,
“எப்போது சரணமடைந்தாரோ அதுவே சரணமடைய ஏற்ற காலம்.
எங்கே சரணமடைந்தாரோ அதுவே சரணமடைய ஏற்ற இடம்” என்று ஆஞ்சநேயப் பெருமாள் கூறினார்.
சரணம் அளிப்பவர் உள்ள இடமே சரணமடைய ஏற்ற இடம்.
இம்சை தாங்காமல் வந்த நேரமே
சரணமடைய ஏற்ற காலம்.

சூத்திரம் 27
இவ்வர்த்தம் மந்திர ரத்னத்தில் ப்ரதம பதத்திலே ஸு பஷ்டம்.

மந்திரரத்தினமான த்வய மந்திரத்தில்
“ஸ்ரீமந் நாராயண சரணெள”
என்று இருப்பதால்,
பிராட்டியும் பகவானும் எங்கும் எப்போதும் இணைபிரியாமல் இருப்பது விளங்கும்.
அதனால் எங்கும் எப்போதும் எம்பெருமானிடம் சரணமடையலாம் என்று பொருள்.

 

சூத்திரம் 28
ப்ரகார நியதி இல்லை என்னுமிடம் எங்கும் காணலாம்.

ஸ்ரீமந் நாராயணனை எந்த சூழ்நிலையிலும் சரணாகதி அடையலாம் என்பதை பல இடங்களில் காணலாம்.

கஜேந்திர யானை குளக்கரையிலே தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சரணமடைந்தது,
ஸ்ரீராமபிரானின் ராமபாணத்தில் இருந்து தப்பிக்க ஸ்ரீராமபிரானிடமே காகாசுரன் சரணமடைந்தது.
போர்க்களத்திலே அர்ச்சுனன் சரணமடைந்தான் ,
சபரி அடர்ந்த காட்டிலே சரணமடைந்தாள்.
குகன் நதிக்கரையிலே சரணமடைந்தான்.
தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காளிங்க பாம்பு சரணமடைந்தது,
தன் மனைவியை மீட்க சுக்ரீவன் சரணமடைந்தான்.
போர் மூளப் போகும் சமயத்திலே விபீஷணன் சரணமடைந்தான்.

இப்படி பறவையும் யானையும் பாம்பும் குரங்கும் மனிதரும் ராக்ஷசரும்
எங்கும் எப்போதும் எம்பெருமானிடம் சரணம் புகலாம்.
சரணமடைய குலமோ ஜாதியோ பிறவியோ தடையில்லை.
எல்லோருக்கும் பரமபதம் தருவான்.
உயர்ந்த ஜாதிக்கு மட்டும் பரமபதம் தருவான் என்று கூறுவது
ஸ்ரீவைஷ்ணவத்தை அறியாத்தனம்.

சூத்திரம் 29
த்ரெளபதி ஸ்நாதையாயன்றே ப்ரபத்தி
பண்ணிற்று, அர்ச்சுனன் – நீசர் நடுவேயிறே இவ்வர்த்தம் கேட்டது.

த்ரெளபதி வீட்டு விலக்காகி இருந்த நிலையிலே, நீசர்கள் நிறைந்திருந்த சபையிலே அல்லவா சரணாகதி செய்தது.
போர்க்களத்தின் நடுவிலே ,
பகை அரசர்களின் சூழ்ந்திருந்த வேளையிலே அல்லவா அர்ச்சுனன் சரணாகதி செய்து கீதையைக் கேட்டான்.

சூத்திரம் 30
ஆகையால் சுத்தி அசத்திகளிரண்டும் தேடவேண்டாம் இருந்தபடியே அதிகாரியாமித்தனை.

ஆகவே சரணாகதிக்கு தகுதியாக
தூய்மையாக இருக்கின்றோமா, தூய்மையில்லாமல் இருக்கின்றோமா என்று ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்க வேண்டாம், இப்பொழுது இருக்கின்ற நிலையே தகுதியாகும்.
(பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்ட பிறகு தூய்மை தானாகவே வந்து விடும்)

சூத்திரம் 31
இவ்விடத்திலே வேல்வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை அருளிச்செய்த வார்த்தையை அனுசரிப்பது.

இந்த இடத்திலே வேல்வெட்டிப்பிள்ளை என்னும் ஆசார்யருக்கு அவருடைய ஆசார்யர் நம்பிள்ளை அருளிச்செய்த வார்த்தையை அனுசரிக்க வேண்டும்.

“ஸ்ரீராமன் கடலரசனை சரண் புகுந்தபோது, சில நியமங்களை கடைப்பிடித்தாரே?” என்று
ஸ்வாமி நம்பிள்ளையிடம் வேல்வெட்டிப்பிள்ளை கேட்டபோது,

“ஆசாரமிக்க இக்ஷ்வாகு ராஜகுலத்தில் பிறந்த ராமர், நியமங்களுடன் சரணடைந்தார். ஆனால் ராக்ஷசன் விபீஷணன் அப்படிச் செய்யவில்லையே, அவரவர் நிலையிருப்பே போதும்.
தகுதியைச் சம்பாதித்துவிட்டு ப்ரபத்தி செய்வதில்லை” என்றார்.

14.12.21.

My youtube channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here