பஞ்சபாண்டவர்கள்

💥💢🔶💢💥

🟨🟥🟨🟥🟨🟥🟨🟥
🕉️
*தேசியமும் தெய்வீகமும்*
*எனது இருகண்கள்*🙏

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🟨🟥🟨🟥🟨🟥🟥🟥

 

🔯🚩 *பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட*

*ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பீமேஸ்வரர்*

*ஆலயம்*
*ஓமந்தூர்*🔯🚩

🚩தென்னாடுடைய சிவனாக, எந்நாட்டவர்க்கும் இறைவனாக நம்மைக் காக்கும் பரம்பொருளுக்கு அமைந்துள்ள அருமையான ஆலயம், ஓமந்தூரில் உள்ள ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீபீமேஸ்வரர் ஆலயம். பழமையான இந்தக்கோயில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் திகழ்ந்துள்ளது. ஆனால் இன்று? அரசர்கள் பலர் வழிபட்ட ஆலயத்துக்கு நம் காலத்தில் ஏன் இந்த அவலநிலை என்று கேட்கத் தோன்றும். ஆயினும் அன்பர்கள் முயற்சியால் திருப்பணி தொடங்கி நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

🚩ராஜராஜசோழனால் 11ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1985-கி.பி. 1014) கட்டப்பட்டதாகவும், இந்த ஊர் ஒவ்வூர் என்று அழைக்கப்பட்டதாகவும் இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. சோழர்களுக்குப் பின்பு ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசர்களும், சம்புவராய மன்னர்களும் ஆலயத்துக்கு வேண்டிய திருப்பணிகளை மேற்கொண்டு இறையருள் பெற்றிருக்கிறார்கள். சம்புவராய மன்னர்களில் முதலாம் ராஜநாராயண சம்புவராயர் காலத்தில் (1337-1368) இத்தலமானது “ஒய்மா நாட்டு ஓசுந்தூர்” என அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டு விளக்குகிறது. ஒவ்வூர், ஓகந்தூர் என்பதே மருவி ஓமந்தூராக வழங்கப்படுகிறது என்பர்.

🚩”ஓம்’ என்பது அனைத்து தெய்வங்களுக்கும் மூல காரணமாகத் திகழும் பிரணவ மந்திரம் ‘அந்தூர்’ என்னும் சொல்லுக்கு ‘பாதகிண்கிணி’ என்று பொருள். திருக் கயிலை பரம்பொருள் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தில் அவரின் பாதக் கிண்கிணியின் ஓசை முதன் முதலில் கேட்ட இடம் இது என்பதால் இவ்வூர் ஓம் + அந்தூர். அதாவது, ஓமந்தூர் என்று அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

🚩பஞ்ச பாண்டவர்கள் தங்களை மறைத்துக் கொண்டு வாழ்ந்தபோது அவர்களின் பசியைப் போக்கி, அவர் களைக் காத்தவர்கள் ஸ்ரீபீமேஸ்வரர் மற்றும் அன்னை பாலாம்பிகை என்பது புராணம்.

🚩பாண்டவர்களில் ஒருவரான பீமன், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தால் சிவனை வழிபட்ட காரணத்தால் “ஓம் அந்தூர்” என்று அழைக்கப்பட்டதாம். பஞ்ச பாண்டவர்களின் பசியைப் போக்குவதற்கு அன்னை பாலாம்பிகை பாத்திரத்தில் தூய பசும்பாலை வழங்கிய காரணத்தால் ‘அன்னை பாலாம்பிகை’ என வழங்கப் படுகிறாள்.

பஞ்சபாண்டவர்கள்

🚩மூலவர்

ஸ்ரீபீமேஸ்வரர் மேற்கு திசை நோக்கி பிரம்மாண்ட மாக 6 அடி உயரத்தில் பெரிய லிங்கவடிவமாகக் காட்சியளிக்கிறார். மனதுக்கு தைரியத்தையும், உடலுக்கு பலத்தையும் அளிப்பதோடு, சகல தோஷங்களையும் நீக்கும் இறைவனாகவும் அருள்பாலிக்கிறார். மூலவர் கைலாயநாதனுக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் கோள்களின் பாதிப்பினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்; குறிப்பாக சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுக்கிர பகவானின் சுகப் பார்வையால் நிறைந்த செல்வமும், மனமகிழ்ச்சியும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற இவரை வணங்கி அருள் பெறுகின்றனர். பக்தர்கள். கல்வெட்டு களில் திருவருளீசுவரத்தாழ்வார், திருவீமிசுவரமுடைய நாயனார், தவப்பாதர நாயனார் என்றெல்லாம் வழங்கப்படுகிறார் ஸ்ரீ பீமேஸ்வரர்.

🚩திருத்தலத்தின் அமைப்பு:

இத்திருக்கோயில், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் எனப் பல்வேறு அமைப்புகளில் காணப்படுகிறது.
மகாமண்டபத்தில் சூரியபகவான், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ ராஜேஸ்வரி உள்ளிட்ட திருமேனிகள், பிராகார வலம் வரும்போது பலிபீடமும் பிரதோஷ நந்திதேவரும் காணப்படுகிறார். இதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானும், மயில் வாகனத்துடன் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ ஆறுமுகக் கடவுளும், நான்கு திருக்கரங் களுடன் நம்மைத் தாங்கும் சக்தியாக அன்னை ஸ்ரீ பாலாம்பிகை தேவியும் வரிசையாக ஒருவரை அடுத்து மற்றொருவர் கிழக்கு திசை நோக்கி தரிசனம் தருகிறார்கள். இதனைத் தவிர கோஷ்டத்தில் ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ மகாவிஷ்ணு, அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோர் அருள் புரிகிறார்கள். ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். நவகிரகங்களுக்கென்று தனிச் சந்நிதியும் உண்டு.

🚩திருப்பணி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் குலதெய்வக் கோயிலான இந்த ஆலயத்துக்கு 1954ஆம் ஆண்டில் வெகுசிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

🚩அமைவிடம்:

திண்டிவனம் – பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில்
அமைந்துள்ளது ஓமந்தூர். ஓமந்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 5 நிமிட நடையில் இந்த ஆலயத்தை அடையலாம்.

ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பீமேஸ்வரர் பஞ்சபாண்டவர்கள்

சிவாய நம🙏🏻
திருச்சிற்றம்பலம்
சர்வம் சிவமயமே
எங்கும்சிவநாமம் ஒலிக்கட்டும் 🙏🏻

🔥🔥🔥🔥🔥
*சர்வம்*
*சிவமயம்*

*ஆன்மீக பயணம்*

🟨🟥🟨🟥🟨🟥🟨🟥
🕉️
*தேசியமும் தெய்வீகமும்*
*எனது இருகண்கள்*🙏

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🟨🟥🟨🟥🟨🟥🟥🟥

*ஜெய ஜெய ஸ்ரீஸூதர்சநா*…….

ஜெய ஜெய ஸ்ரீஸூதர்சநா……

ஸ்ரீ சக்கரம் என்னும்
ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான்
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்!
அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள
ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.

ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன்,
ஸ்ரீ சுதர்ஸனம் – இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.
ஸ்ரீ வைகுண்டத்தில்
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.

பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார்,
ஸ்ரீ அனந்தாழ்வார்
என ஆழ்வார் என்ற அடைமொழி இவர்கள் மூவர் மட்டுமே
ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர்.

இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர்.
ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை
ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர்.
“புனரபி ஜனனம், -புனரபி மரணம்” (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது.

இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்டார்.
வைணவ ஆலயங்களில் நிகழும் பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும்.

ஜுவாலா கேசமும், திரிநேத்ரமும், பதினாறு கரங்களும், பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால், முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்கள், கெடுதிகள் யாவும் நீங்கும்.
அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும்.
புராணப் பெருமைகள் மிகுந்த, மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில், கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி கோவில் ஆகிய திருத்தலங்களில் மிகுந்த விசேஷமானவர்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.

தென்திசையின் திலகமான திருமாலிருஞ்சோலையை வந்து சேவித்த பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி சார்ங்கதன்வா கதாதர’ என சகஸ்ரநாமத்தில் – கள்ளழகரான விஷ்ணுவைப் போற்றுகிறார். இங்கு பாதுகாப்பு கருதி மாலவனின் திருக்கர சக்கரம், தாயார் சன்னதிக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேறெங்கும் இல்லாத தரிசனமாக ‘பிம்பரூபத்தில்’ மேற்புறம் ‘ஹிரண்ய சம்ஹார நரசிம்மர், கீழ்ப்புறம் ஸ்ரீ வராக ஸ்வாமியாக சிறப்புடன் திகழ்கிறார்.

பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என ‘திரிகரண சுத்தியுடன் ஸ்ரீ சுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட “நினைத்தது நிறைவேறும்!” சகல சுகங்களும் பெற்றுச் சிறக்கலாம்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும், சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமேயும், இயன்றதை நிவேதனம் செய்து, பூஜித்து, சேவிக்கலாம்.
தினமும், “ஸ்ரீ சுதர்ஸனாய ஹ{ம்பட்” என்ற மந்திரத்தையும்,
“ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி,
தந்நச் சக்ர ப்ரசோதயாத்,”
என்ற ஸ்ரீ சுதர்ஸன காயத்ரீயையும் ஜபிக்கலாம்.

இவ்விதம் வழிபட்டு வரம் பெறலாம். நிச்சயம் நினைத்தது நிறைவேறும்!
ஸ்ரீ சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்!

🔥🔥🔥🔥🔥
*சர்வம்*
*சிவமயம்*

*ஆன்மீக பயணம்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🟨🟥🟨🟥🟨🟥🟥🟥

 

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

*நீ . . .நீயாக இரு..!!*

*தங்கம் விலை அதிகம்தான்.*
*தகரம் மலிவு தான். ஆனால்,*
*தகரத்தைக் கொண்டு*
*செய்யவேண்டியதை*
*தங்கம் கொண்டு*
*செய்ய முடியாது.*

*அதனால் தகரம் மட்டமில்லை,*
*தங்கமும் உயர்ந்ததில்லை*
*எனவே,*
*நீ . . .நீயாக இரு !*

*கங்கை நீர் புனிதம் தான்*
*சிலருக்கு, அதனால்*
*கிணற்று நீர் வீண்*
*என்று அர்த்தமில்லை.*

*தாகத்தில் தவிப்பவருக்கு*
*கங்கையாயிருந்தால் என்ன,*
*கிணறாகயிருந்தால் என்ன*
*நீ . . .நீயாக இரு !*

*காகம் மயில் போல்*
*அழகில்லை தான், ஆனாலும்*
*படையல் என்னவோ*
*காக்கைக்குத்தான்*
*நீ . . .நீயாக இரு !*

*நாய்க்கு சிங்கம் போல்*
*வீரமில்லை தான்,*
*ஆனாலும் நன்றி என்னவோ*
*நாய்க்குத் தான்*
*நீ . . .நீயாக இரு !*

*பட்டு போல் பருத்தி*
*இல்லை தான், ஆனாலும்*
*வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான்*
*நீ . . .நீயாக இரு !*

*ஆகாயம் போல்*
*பூமி இல்லைதான்,*
*ஆனாலும் தாங்குவதற்கு*
*இருப்பது பூமிதான்*
*நீ . . .நீயாக இரு !*

*நேற்று போல் இன்றில்லை*
*இன்று போல் நாளையில்லை,*
*அதனால் ஒவ்வொன்றும்*
*அற்புதம்தான், எனவே,*
*நீ . . .நீயாக இரு !*

*அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை,*
*அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை,*
*அதில் நொந்துபோக ஒன்றுமில்லை,*
*அதில் பாவம் ஏதுமில்லை,*
*அதில் அசிங்கம் ஒன்றுமில்லை;*

*உன்னை உரசிப் பார்*
*உன்னை சரி*
*செய்து கொண்டே வா*
*நீ . . .நீயாக இரு !*

*உலகம் ஒரு நாள்*
*உன்னைப் போல்*
*வாழ ஆசைப்படும்*
*நீ . . .நீயாக இரு !*

*உலகம் ஒரு நாள் உன்னை உதாரணமாகக் கொள்ளும்*
*நீ . . .நீயாக இரு !*

*உலகம் ஒரு நாள்*
*உன்னைப் பாடமாக ஏற்கும்*
*நீ . . .நீயாக இரு !*

*உலகம் ஒரு நாள்*
*உன் வழி நடக்கும்*
*நீ . . .நீயாக இரு !*

*அடுத்தவனுக்காக மாறி*
*உனக்காக உள்ளோரை*
*இழக்காதே..!*

*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீயாகவே இரு !*

*இன்று*
*உழைத்து பார்,*

*நாளை…*
*வெற்றி நிச்சயம்!*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here