நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள்

நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள்

நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள் பற்றிய பதிவு

தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும். நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்களில் முக்கியமானவை பதினொன்று ஆகும்.

எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

நான்காவது ஸ்தலம் திருவாவடுதுறை. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன.

திருப்பைஞ்சீலி, வாழை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது.

நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள்

திருக்கடையூரில் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம்

காளஹஸ்தி ஆறாவது ஸ்தலம் . பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட தங்கஏணியில் (golden ladder) ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தைக் குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏணி சிவலிங்கத்தின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதைத் தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.

திருமழபாடி. திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை.

திருக்கடையூர் . இதன் தலபுராணம் வித்தியாசமானது. எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது.

நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள்

ஒன்பதாவது ஸ்தலம் திருமழபாடி திருவையாறு அருகில் இருக்கிறது.

பின் பத்தாவது ஸ்தலம் திருவெங்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விடப் பழமையானவர்.

திருப்புரம்பியம் பதினோராவது ஸ்தலம். இங்கும் நவக்கிரகம் கிடையாது

நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள்

சிவாய நம
திருச்சிற்றம்பலம்
சர்வம் சிவமயமே
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்

*ஓம் நமசிவாய**ஓம் நமச்சிவாய*

*சிவன் ஏன் சுடுகாட்டில் வசித்தார்?*

சுடுகாடு, மயானம் என்றால் அனைவருக்கு மே ஒரு பயம்,ஒருவித தயக்கம்,கலக்கம் இருக்கும். முடிந்தவரை அவை இருக்கும் வழியில் கூட செல்லாமல் சுற்றிச் செல்லும் பாதையையே தேர்ந்தெடுப்போம்.

ஆனால் சிவனோ சுடுகாட்டிலேயே சென்று அமர்ந்து கொண்டார். அவர் ஏன் அவ்வாறு செய்தார்?

சுடுகாட்டில் இறந்து போனவர்களும், அவர்கள் ஆவிகளும் இருக்கின்ற இடத்தில் சிவனுக்கு என்ன வேலை? பொதுவாகவே உடலும் உயிரு ம் சேர்ந்தால் தான் அதை உயிரினம் என்று அழைக்கிறோம். உடலை விட்டு உயிர் பிரிந்த அடுத்த நொடியே உடலை பிணமென்று தான் அழைப்பர்.

இந்த பிணத்தை இரண்டு நாட்களுக்கு மேல் யாரும் சீண்டக்கூட மாட்டார்கள்.ஆனால் உட லை விட்டு பிரிந்த உயிருக்கு அப்படி இல்லை. நம் உயிரானது நமது உடலை எப்போதும் நேசி த்துக் கொண்டே தான் இருக்கும்.

நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள்

நாம் ஒரு வீட்டில் ஒரு வருடம் குடி இருந்தால் கூட அந்த வீட்டை விட்டு வெளியேறும் போதும் நமது மனம் எப்படி பதை பதைக்குமோ,அதே பதைபதைப்பு தான் இறந்தவரின் ஆன்மாவி ற்கும் அவரது உடலை எரிக்கவோ புதைக்க வோ செய்யும்போது இருக்கும்.

ஐயோ, இத்தனை வருடங்களாக நாம் பேணிக் காத்த நமது உடலை இப்படி எரிக்கிறார்களே என்று ஆன்மா பரிதவிக்கும்போது அந்த ஆன்மாவிற்கு ஆறுதல் அளித்து அடைக்கலம் தருவது அந்த பரமசிவன் தான்.

இன்று மனிதர்கள் பலரிடம் தீவிரம் இருப்பதி ல்லை.பலரின் வாழ்வில் மரணம் நெருங்கும் அந்தக் கணம், அல்லது கிட்டத்தட்ட மரணம் நிகழ்ந்திருக்கக் கூடிய அந்த நொடி தான் அவர் கள் வாழ்விலேயே மிகத் தீவிரமான நேரமாக இருக்கிறது.இந்தத் தீவிரத்தை அவர்களின் வாழ்நாளில் வேறு எப்போதுமே அவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

அன்பு, நேசம், பாசம், காதல், சிரிப்பு, சந்தோ ஷம், சோகம், துக்கம் என எதிலுமே அவர்களி டம் இந்த அளவிற்குத் தீவிரம் தென்படுவதில் லை. மரணத்தைத் தவிர. இதனால் தான் சிவன் மயானத்தில் சென்றமர்ந்தார்.

மயானத்தை ‘காயந்த்த’ என்றழைப்பார்கள்.
‘காயா’ என்றால் உடல்.’அந்த்த’ என்றால் முடிவு. அதாவது உடல் முடியும் இடம். இதை ‘ஜீவந்த்த’ என்று சொல்லாமல் ‘காயந்த்த’என்றே சொல் கிறார்கள்.அதாவது,இது உயிர் முடியும் இடம ல்ல, உடல் மட்டும் முடிவுறும் இடம். இந்த மண் ணில் இருந்து நீங்கள் எடுத்து சேர்த்த அனை த்தையும் இங்கேயே விட்டுவிட வேண்டும்.

ஊரெங்கும் நடக்கும் பலவற்றுள், ‘உண்மை‘ யாக நடக்கும் ஒன்றே ஒன்று. அதுவும் மயான த்தில் தான் நடக்கிறது.அதனால் சிவன் தன் இருப்பிடத்தை ‘ஷ்மஷான்’த்திற்கு (மயானம்) மாற்றிக் கொண்டார்.’ஷ்ம’ என்றால் சவம், இறந்தவரின் உடல்.’ஷான்’ என்றால் படுக்கை. வாழ்பவர்களின் மத்தியில் இருப்பது நேர விரயம் என்றுணர்ந்த சிவன், இறந்தவர்களின் உடல் இருக்கும் இடத்திற்கு வசிக்க சென்றார். எந்த இடத்தில் வாழ்க்கையின் அர்த்தம் மிகத் தெளிவாக விளங்குமோ, அவ்விடத்திலே சிவன் அமர்ந்தார்.

நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள்

சிவனை அழிக்கும் சக்தி என்று சொல்வார்க ள்.இது ஏதோ அவருக்கு நம்மை அழிப்பதில் அவ்வளவு ஆசை என்று அர்த்தமல்ல. மயான த்தில் அவர் நமது ‘உடல்’ அழிவதற்காகக் காத்திருக்கிறார். காரணம் ஒருவரின் உடல் அழியும் வரை, அவரின் சுற்றத்தாருக்கும் கூட மரணம் என்றால் என்ன என்பது தெளிவாகப் புரிவதில்லை.

யாரேனும் ஒருவர் இறந்துவி ட்டால், அவரின் நெருங்கியவர்கள் அவரின் உடல் மேல் அழுது, புலம்பி, முத்தம் வைத்து, கட்டி அணைத்து, எப் படியேனும் அவரை மீண் டும் உயிர் பிழைக்க செய்ய இன்னும் ஏதேதோ செய்வார்கள்.

ஆனால் அந்த உடலிற்கு நெருப்பு வைத்து விட் டால்,அதனருகில் சென்று யாரும் நெருப்பை கட்டியணைக்க முயலமாட் டார்கள்.அவர்களின் ‘சுய-பாதுகாப்பு’க் கவசம் அதை எப்படியும் தடுத்திடும்.

அதனால் தான் சிவன், “உண்மை” விளங்கும் இடமான மயானத்தில் அமர்ந்திருந்தார்.

எங்கும் நிறைந்திருக்கும் அந்த பரஞ்சோதி நாம் இறந்த பிறகும் நம்மை காத்து ரட்சிக்க சுடுகாட்டிலும் இருக்கிறார். உயிரானது உடலை விட்டு பிரிந்தாலும் நம்மை விட்டு எப்போதும் பிரியாது.

நம் ஆன்மாவை காத்து ரட்சிக்கும் அந்த ஈசனை, நமக்கான அனைத்து நலன்களையும் புரியும் அவரை போற்றுவதே இந்த மானிட பிறப்பின் பாக்கியமாக கருதுவோம்.

நவக்கிகள் இல்லாத சிவாலயங்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
சீரார் திருவையார போற்றி! போற்றி!.

*திருச்சிற்றம்பலம்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here