சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

🌷 *சிவ ஸ்தலங்களின் பெருமைகள் !!*
🕉️ 🙏 💐

ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்.

1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

*காசிக்கு சமமான ஸ்தலங்கள்.*

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

1, திருவெண்காடு.
2, திருவையாறு.
3, மயிலாடுதறை.
4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு.
6, ஸ்ரீவாஞ்சியம்.
7, விருத்தாசலம்.
8, மதுரை.
9, திருப்புவனம்

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

*பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்.*

1,காசி
2,காஞ்சி
3,மதுராபுரி
4,அரித்துவார்
5,உஜ்ஜையினி
6,அயோத்தி
7,துவாரகை.

பாரதமே பரமசிவம்.

1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்

திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

திவசம் சிறப்பு இடம் {பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.}

காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.

1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.

பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.

1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய

*திருச்சிற்றம்பலம்.*

சிவ ஸ்தலங்களின் பெருமைகள்

🌹 🕉️ 🙏 💐 🌹

*நமசிவய*

*கர்மவினையும்*
*கடவுள் தரிசனமும்*

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம்
இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது.

பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான். கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல, மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்.

எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ, அதேபோல.. ராணியாருக்கும், மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும், நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும் என்று ஆவலான வரத்தை கேட்டான்.

இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்.

“அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன்” என்று சொல்லி மறைந்தார்.

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும் மக்களுடனும் மலையை நோக்கி புறப்பட்டான்.

அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர். சிறிது உயரம் சென்றவுடன். அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன. உடனே, மக்களில் நிறைய பேர் செம்பை மடியில் கட்டிக்கொண்டு, சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.

மன்னன் “அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது, இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்” என்று உரக்க சப்தமிட்டான்.

அதற்கு “மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது” என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேற துவங்கினான் மன்னன்.

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும், வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன. அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர்

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான், “விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன” என்று உரைத்தான்.

“மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும்” என்று சொல்லிக்கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்.

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன், மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.

இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட, மீதி இருந்தவர்கள் ராணியும், மந்திரியும், தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே.

சரி வாருங்கள்..செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..
அங்கே தென்பட்டது வைரமலை.

அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..
மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.

கடவுள் மன்னன் முன் தோன்றி “எங்கே உன் மக்கள்” என்றார்.

மன்னன் தலை குனிந்தவனாக “அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே…என்னை மன்னியுங்கள்” என்றான்.

அதற்கு கடவுள் “நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்.. அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..

உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்.. செல்வம்.. சொத்து…என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்..

இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்” என்று சொல்லி மறைந்தார்

*திருச்சிற்றம்பலம்*