கீரை

உணவே மருந்து
தூதுவளைக் கீரையின் பயன்கள்

தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கி மிளகு சீரகம் சேர்த்து தாளித்து துவையலாக செய்து சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வந்தால்

தொண்டை மற்றும் நுரையீரலில் தேங்கி நிற்கும் சளி நீங்கிவிடும் நாடி நரம்புகள் வலிமை அடையும் இதன் மூலம் உடலுக்கு பலம் அதிகரிக்கும் அறிவில் தெளிவும் புத்தியில் சிந்தனை திறனும் உண்டாகும்

தூதுவளை கீரையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால்

நுரையீரல் கோளாறு புற்றுநோய் சயரோகம் ஆஸ்த்துமா டான்சில் தைராய்டு கட்டிகள் கண்ணம் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் எழுச்சிக் கட்டிகள் தொண்டைக்கட்டு வாய்வு கோளாறு ஞாபக சக்தி குறைபாடு உடல் பலவீனம் சத்து பற்றாக்குறை போன்ற நோய்கள் உடலில் தோன்றாது

மேலும்

மூளை நரம்புகள் பலம் பெறுவதால் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கீரையை சாப்பிட்டு வருவோருக்கு அதிகமான அறிவு வளர்ச்சி உண்டாகும் இது உறுதி

அறிவு வளர்ச்சியை அதிகமாக தரும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதாலே இந்த கீரையை ஞான மூலிகை என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதே இதற்கு சான்றாகும்

தூதுவளை கீரையில் மூலம்
சில எளிய வைத்திய முறைகள்

கீரை

தூதுவளை இலை சாறுடன் சம அளவு நெய் சேர்த்து இலேசாக காய்ச்சி இதில் இரண்டு ஸ்பூன் தினந்தோறும் காலை வேளையில் சாப்பிட்டு வர எலும்புருக்கி நோய் குணமாகும் மேலும் காய்ச்சல் மார்பு சளி போன்ற நோய்கள் நீங்கும்

மூச்சு திணறல் குணமாக

தூதுவளை கீரையின் வேர் இலை பூ காய் தண்டு இவைகளை சம அளவாக சேகரித்து காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதில் இரண்டு ஸ்பூன் எடுத்து நானூறுமில்லி தண்ணீரில் கலந்து நூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி

இதை காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள்பருகி வர இரைப்பு நோய் சுவாசகாசம் மூச்சுத்திணறல் சளி போன்ற கப நோய்கள் அனைத்தும் குணமாகும்

முக வசீகரம் உண்டாக

தூதுவளை பூவை பதினைந்து எடுத்து பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி இதை தினந்தோறும் குறைந்தது ஒரு மண்டல காலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் பலம் அதிகரிக்கும் முக வசீகரம் ஏற்படும் அழகும் ஆரோக்கியமும் ஆயுள் பலமும் கூடும்

ஆண்மை சக்தி உண்டாக

தூதுவளை பூவுடன் சமமாக யானை நெருஞ்சில் பூவையும் சேர்த்து பசும் பாலில் கலந்து காய்ச்சி இதை காலை வேளையில் பருகிவர ஆண்மை சக்தி உண்டாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

விச காய்ச்சலை குணமாக்கும்
தூதுவளை கசாயம்

கீரை

தூதுவளை கண்டங்கத்திரி பற்படாகம் விஷ்ணுகிரந்தி இவைகளை வகைக்கு ஒரு கைப்பிடி அளவு பறித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரேநூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சிறியவர் என்றால் ஐந்து மில்லி அளவும் பெரியவர்களுக்கு 100 மில்லியளவும் சாப்பிட்டுவர நிமோனியா டைப்பாய்டு போன்ற காய்ச்சல் குளிர் காய்ச்சல் மற்றும் விஷ கிருமி தொற்றால் ஏற்படும் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்

ஆஸ்துமா குணமாக

தூதுவளை இலை
கண்டங்கத்திரி இலை
திப்பிலி
இண்டு வேர்

இவைகளை சம அளவாக பொடி செய்து இதில் 5 கிராம் எடுத்து 400 மில்லி தண்ணீரில் கலந்து இதை 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறுகள் நீங்கும்
தீராத சளி மற்றும் மூக்கடைப்பு குணமாகும்

மேலும்

தூதுவளைக் கீரையை இடித்து சாறு பிழிந்து இதில் ஐம்பது மில்லி எடுத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயால் ஏற்படும் சளி மற்றும் இருமல் மேலும் மூச்சுத்திணறல் போன்ற கபம் நோய்கள் அனைத்தும் விலகும்

நுரையீரல் வலிமை பெற

தூதுவளை காயை சேகரித்து மோரில் ஊற வைத்து இதை வெயிலில் விட்டு வர்களாக உலர்த்தி பணிக்காலம் மற்றும் மழை காலங்களில் இதை நல்லெண்ணெயில் பொறித்து சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயின் தொந்தராவல் ஏற்படும் சுவாச தடைகள் நீங்கும்
மேல்மூச்சு கீழ்மூச்சாக வாங்கும் இரைப்பு நோய் விலகும் நுரையீரல் வலிமை பெறும்

சளி இருமல் குணமாக

தூதுவளையை பொடி செய்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை சாப்பிட்டு வர சளி இருமல் போன்ற கப நோய்கள் விலகும் மேலும் தூதுவளை பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்

இருமல் குணமாக

தூதுவளை இலை திப்பிலி இவை இரண்டையும் சம அளவாக பொடி செய்துகொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து தேனுடன் குழைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வர ஒரு வார காலத்தில் தீராத இருமல் தீரும்

பித்தமயக்கம் குணமாக

கீரை

தூதுவளை இலைப் பொடியை மூன்று கிராம் எடுத்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வர பித்த மயக்கம் நீங்கும் மேலும் பித்த நோய்கள் அனைத்தும் விலகும்

தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி வரும் நாட்களில் உணவில் புளியை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்

🟨🟥🟨🟥🟨🟥🟥🟥

*தினம் ஒரு மூலிகை – வெந்தயக் கீரை*

வெந்தயக் கீரை

வெந்தய விதையின் இளஞ்செடிகளாக வளர்ந்திருப்பதேயே வெந்தயக் கீரை என்று சொல்லப்படுகிறது. இந்த கீரை எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கும். இது எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது என்று தொியவில்லை. இதன் தாயகம் கிழக்கு ஐரோப்பா மற்றும் எத்தியோப்பியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வெந்தயம் அதிகமாகப் பயிரிடும் நாடுகள் இந்தியா, பாக்கீஸ்தான், நேபால், பங்களாதேஷ், அர்ஜென்டெய்னா, எகிப்து, பிரான்ஸ் இன்னும் பிற நாடுகளாகும். உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. வளமான மண்ணில் வெந்தய விதையை விதைத்தால், ஈரப்பதம் கிடைத்தவுடன் செடி முளைக்க ஆரம்பிக்கும்.

இதற்கு தண்ணீர் தேங்கக்கூடாது. கடல் கரை சாா்ந்த மணற்பாங்கான இடங்களில் நன்கு வளர்கிறது. எல்லா வகை நிலங்களும் இதற்கு ஏற்றது. இந்த செடிக்கு வெய்யிலும் தேவை. சுமாா் 60 செ.மீ உயரம் வரை வளரும். இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மூன்றாகப் பிரியும். இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன்படுத்துவாா்கள்.

கீரையை காய வைத்தும் பயன்படுத்துவாா்கள் அதை மேத்தி என்று கூறுவர். இந்தச் செடியை ஆதிகாலத்தில் மாட்டுத் தீவனமாகவும் பயன்படுத்தினாா்கள். வெந்தயக்கீரையில் அதிகம் உயிர்சத்துகள் நிறைந்திருப்பதால் இதனை வாரத்திற்கு இரண்டு முறையாவது அவசியம் சாப்பிட வேண்டும். இது குளிர்ச்சி நிறைந்தது. இதில் சாம்பாா் செய்தால் மணமாக இருக்கும்.

பயன்கள்

கீரை

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியில் போட்டுச் சிறிதளவு தண்ணீா் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சா்க்கரை சோ்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சோ்த்துக் கடைந்து, ஒரு ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம். இதனை காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். வயிற்றுப்போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கும், உடலை வளா்க்கும் மற்றும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

கீரை

வெந்தயக்கீரையில் உள்ள உயிர்ச்சத்துக்கள், 20 கிராம் வெந்தயக்கீரையில் 100மி.கி வைட்டமின் ஏ உயிர்ச்சத்தும், 1மி.கி வைட்டமின் பி1 உயிர்ச்சத்தும், 40மி.கி வைட்டமின் பி2 உயிர்ச்சத்தும், 110மி.கி சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது. இதன் கலோாி என்னும் உஷ்ண அளவு 19 இருக்கின்றது.

பத்துகிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்து அரைத்து மோாில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கம் தீரும்.
இந்தக் கீரையுடன் புளி, அத்திப்பழம், திராட்சை முதலிய மூன்றையும் சோ்த்துக் கஷாயம் செய்து இதனோடு தேவையான அளவிற்கு தேனினைக் கலந்து சாப்பிட்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல், உடல் சூடு, வறட்டு இருமல், மூலநோய், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகிய பிணிகள் தீரும்.

வெந்தயம் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தும், 5கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்பால் பெருகும், தீப்புண்ணை ஆற்றும், உடல் கட்டிகள் பழுத்து உடையச் செய்யும், வலி போக்கும். சர்க்கரை வியாதியைக் குறைக்கும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும்.
வெந்தயக் கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்புசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளா் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளா் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சு வலி பூரணமாகக் குணமாகும்.
வெந்தயத்துடன் சமன் அளவு சீமையத்திப் பழுத்தைச் சோ்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சோ்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.
முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

வெந்தயக் கீரையில் 49 கலோாி சத்துள்ளது. வெந்தயக் கீரையுடன் பாசிப்பயிரு சோ்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.
வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைச் சாப்பிடும் போது கண்பாா்வை குறை, வாதம், இரத்தசோகை, மாரடைப்பு, பசியின்மை போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும்.
பயன் தரும் பாகங்கள்

கீரை

இலை தண்டு, விதை முதலியன.

வேறு பெயா்

வெந்தியம், மேத்தி, வெந்தை முதலியன

தாவரப் பெயா்கள்

🟨🟥🟨🟥🟨🟥🟥🟥

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here