⛩️உலகிலேயே மிக உயரமான 5 சிவன் சிலைகள்⛩️
🙏#சிவபெருமானின் மிகப்பெரிய சிலைகள் உலகெங்கிலும் உள்ளது. மேலும் பல மிகப்பெரிய சிலைகள் தற்பொழுதும் நிறுவப்பட்டு வருகிறது . அப்படி உலகெங்கிலும் உள்ள சிவபெருமானின் மிகப்பெரிய 5 சிலைகளை பற்றி பார்ப்போம்.
உலகிலேயே மிக உயரமான 5 சிவன் சிலைகள்
🪴5. மங்கல் மஹாதேவ் சிலை #மொரிஷியஸ் (107 அடி)
Mangal Mahadev statue Mauritius.
மங்கல் மஹாதேவ் 108 அடி உயரத்தில் சிவபெருமானின் தனிச்சிறப்பு வாய்ந்த சிலைகளில் ஒன்றாகும். இது மொரிஷியஸ் இல் கங்கை தலாவோ ஏரியில் அமைந்துள்ளது. இது மொரீஷியஸ் இன் வெப்பமான கடற்கரைப்பகுதியில் உயரமானதாக கம்பீரமாக நிற்கிறது.
உலகிலேயே மிக உயரமான 5 சிவன் சிலைகள்
🪴4. ஆதியோகி சிலை கோவை (112 அடி)
Adiyogi Shiva Statue,Coimbatore,TN.
கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு கொண்ட சிலை என்று அறிவித்து, அங்கீகாரம் அளித்துள்ளது கின்னஸ் புத்தகம் . சிலை மதிப்பிடப்பட்ட எடை சுமார் 500 டன்கள் ஆகும் .
உலகிலேயே மிக உயரமான 5 சிவன் சிலைகள்
🪴3. சூர் சாகர் லேக் சிவன் சிலை வதோதரா (120 அடி)
Sursagar Lake, Vadodara, Gujarat
இந்த ஏரியின் நடுவில் வதோதரா மாநகராட்சி சிவன் ஒரு பெரிய சிவன் சிலை ஒன்றை அமைத்துள்ளனர் .இங்கு சிவபெருமானின் சிலை 120 அடி உயரத்தில் உள்ளது. இரவு நேரத்தில் இந்த சிலை மீது காணும் வகையில் செய்யப்பட்ட விளக்கொளி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
உலகிலேயே மிக உயரமான 5 சிவன் சிலைகள்
🪴2. முருதேஸ்வரர் சிவன் சிலை கர்நாடகா. (122 அடி)
Shiva of Murudeshwar,Karnataka.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பட்கல் என்னுமிடத்தில் உள்ள முருதேஸ்வரர் கோவில் அருகில் இந்த சிலை அமைந்துள்ளது
புகழ்பெற்ற இந்த கோவிலில் இருக்கும் சிவன் சிலை உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை. கடற்கரையின் அருகில் அமைந்துள்ள இது 122 அடி உயரம் கொண்டது. வெள்ளி நிறத்தில் சிவன் பிரமாண்டமாக தெரிகிறார்.
உலகிலேயே மிக உயரமான 5 சிவன் சிலைகள்
🪴1. கைலாஷ்நாத் மகாதேவ் சிவன் சிலை நேப்பாள் (144அடி)
Kailashnath Mahadev Statue, Nepal.
கைலாஷ்நாத மஹாதேவ் நேபாளத்தில் மிக உயரமான நின்ற நிலையில் உள்ள சிவனின் சிலையாக விளங்குகிறது. சிலை தாமிர வர்ணத்திலும் முகம் அமைதியாகவும், இனிமையானதாகவும், பக்தர்களை வரவேற்பதாகவும் உள்ளது.
இந்த சிலை நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் அமைந்துள்ளது. 144 அடி (44 மீ) உயரம் கொண்ட இந்த சிலை, செம்பு, துத்தநாகம், கான்கிரீட் மற்றும் எஃகு பயன்படுத்தி செய்துள்ளார்கள். உயரமான சிலைகள் பட்டியல் படி, கைலாஷ்நாத் மகாதேவ் உலகின் மிகச்சிறந்த சிலையாக உள்ளது.
🔱ஓம் நமச்சிவாய🔱
உலகிலேயே மிக உயரமான 5 சிவன் சிலைகள்
[…] இச்சிற்பத்தினைப் போன்ற வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் […]